முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாடகம் ஆரம்பம்!

 அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்குப்பதிவு #AnbilMahesh | #DMK

சரியாக இடைத்தேர்தலுக்கு முன் மத்தியப் குற்றப்பிரிவு போலிசார் ரெய்டு செய்கிறார்கள் எனில் இது ஏற்கனவே திட்டமிட்டது எனத் தெரிகிறது - அதாவது தவெக அரசின் நிர்வாகப் போதாமை, ஊழல் புகார்கள், வாக்குறுதிகளை நிறைவேற்றாமை, மின்தட்டு, மின்கட்டண உயர்வு எனப் பல பிரச்சினைகளால் மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள். இடைத்தேர்தலில் தம் சாதனைகளைச் சொல்லி தவெகவால் பிரச்சாரம் பண்ண இயலாது. ஒரே வழி கவனம் திருப்பி உணர்ச்சிகளைத் தூண்டி பிரச்சாரம் பண்ணுவது. இடைத்தேர்தலில் தவெக முழுக்க முழுக்க திமுகவின் ஊழல் புகார்களைப் பற்றியே பேசப் போகிறது. தன்னுடையது ஊழலற்ற ஆட்சி, திமுக ஊழல் ஆட்சி செய்தது என விஜய் கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணப் போகிறார். எப்படியும் வழக்கில் ஆதாரம் இல்லையென அன்பில் மகேஸை விடுதலை பண்ணுவார்கள். அப்போது இன்னொரு வழக்கை திமுக மீது இவர்களோ மத்திய அரசை வைத்தோ பதிவு பண்ணுவார்கள். அதுவும் பின்னர் நீதிமன்றத்தால் கேள்விக்குள்ளாக்கப்படும்.

இப்படியே ஐந்தாண்டுகளை ஓட்டுவார்கள்.
ஒன்றிய அரசு இவர்களுக்குச் செய்யும் உதவிகளைப் பார்க்கையில் எந்தரங்கள் இடைத்தேர்தலிலும் வாக்குகளை தவெகவுக்கு அள்ளி வழங்குமெனத் தெரிகிறது. அதே நேரம் பாஜக இன்னொரு பக்கம் தவெக அரசை விமர்சித்து கலாய்த்து டுரோல் பண்ணிக் கொண்டும் இருக்கிறார்கள். அவர்களுடைய மாநிலத் தலைவர் விஜய்யை மானவாரியாக அவமதிக்கிறார். ஆனால் தவெக அதற்கு பதிலே அளிப்பதில்லை. தவெகவை இப்படி ஒரு பக்கம் அடித்துக் கொண்டும் இன்னொரு பக்கம் ஆதரித்துக் கொண்டும் அவர்களைக் கொண்டு திமுகவை பலவீனப்படுத்திவிட்டு அடுத்து தவெக vs பாஜக எனத் தேர்தல் கதையாடலை உருவாக்கி கடைசியில் விஜய் எனும் பொம்மையைத் தரையில் போட்டு உடைப்பார்கள்.
இம்முறை எந்திரங்களும் ஒரு பக்கம் வாக்களிக்கும் என்பதால், மக்கள் ஒருசேர கடுங்கோபத்தில் நிராகரித்தால் ஒழிய இடைத்தேர்தலில் தவெகவை முறியடிப்பது கடினமானது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...