முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ராமாயணம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வால்மீகியின் ராமாயணம் - ஒரு உருவகக் கதை

  பிபெக் தேப்ராயின் ராமாயண மொழிபெயர்ப்பைத் தற்போது படித்து வருகிறேன். ஏற்கனவே இவரது மொழிபெயர்ப்பில் மகாபாரதத்தைப் படித்திருக்கிறேன். தெளிவான சிக்கல் இல்லாத மொழிபெயர்ப்பு. ராமாயணம் ஒரு ஒழுக்கவாத, லட்சியவாதப் படைப்பு எனும் எண்ணம் நீண்ட காலமாக இருந்தது. அதனாலே அதன் மீது ஒரு கசப்பும் இருந்தது. நான் படித்த ராமாயணச் சுருக்கக் கதைகளும் பார்த்த நெடுந்தொடரும் இதற்குக் காரணம். அவை ராமாயணத்தின் காட்சிகளை மட்டுமே தொகுத்துத் தருவதாலும் புறவயமாக மாற்றுவதாலும் ஏற்படுகிற சிக்கல் இதுவென இப்போது தோன்றுகிறது. ராமாயணம் அடிப்படையில் ஒரு உருவகப் புனைவு. அதன் கவனம் முழுக்கவே உருவக மொழியில் ஒரு தனிமனிதரின் ஆன்மீகச் சஞ்சாரத்தைச் சித்தரிப்பதிலேயே உள்ளது. தான் யாரென்பதை அறிவதிலேயே ராமனின் கவனம் ஆரம்பம் முதலே இருக்கிறது. அவன் ஒவ்வொரு முறை தன் ஆழங்களை அறியும்போதும் அவனது கோபமும் இச்சையும் அகந்தையும் அவனைப் பின்னுக்கு இழுக்கிறது. அவனது குடும்பத்தினர், சகோதரர்கள், அவனை எதிர்கொள்ளும் துறவிகள், அசுரர்கள் என ஒவ்வொருவராக அவனைத் திசை திருப்பிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் அவனது அகவுலகின் பிறழ்வுகளின் புறவடிவங்கள்....