இளைஞர் காங்கிரஸாரின் கணக்குகளை முடக்கியதை எதிர்த்து மெட்டா அலுவலகங்களில் காங்கிரஸ் செய்த போராட்டத்தை ஊடகங்களில் பார்த்திருப்பீர்கள். முன்பு ஆளுங்கட்சி ரிப்போர்ட் அடிக்கும் பதிவுகளை மட்டும்தான் நீக்குவார்கள். இப்போது அதைவிட ஆபத்தான காரியம் ஒன்றை சமூக ஊடகங்கள் செய்கின்றன: ஏஐ பயன்படுத்துவது. உ.தா., பேஸ்புக்கில் நீங்கள் ஒரு பதிவை எழுதிப் பதிவிட்டதும் அதன் ஏஐ அப்பதிவு ஒன்றிய அரசை விமர்சித்து எழுதப்பட்டதா, அவ்விமர்சனத்தில் அரசின் பிம்பத்தை உலக அளவில் பாதிக்கிற வகையில் எழுதப்பட்டுள்ளதா எனச் சோதிக்கிறது. ஏஐயால் இன்று பகடி, விமர்சனம், கோபம் எல்லாவற்றையும் கணிக்க முடியும். ஆகையால் அது தொனியையும் அவதானிக்கிறது. சில வினாடிகளில் உங்கள் பதிவு அரசுக்கு எதிரானதா ஆதரவானதா எனப் பார்த்து எதிர்ப்புப் பதிவுகளை நீக்கிவிடுகிறது. அது மட்டுமல்ல தொடர்ந்து எழுதினால் தடை செய்வோம் என எச்சரிக்கிறது. இந்தப் புதிய மாற்றம் ஆபத்தானது - மோடிக்கு எதிரான ஜென் ஸீ போராட்டங்களுக்குப் பிறகே இந்தப் புதிய நடைமுறையை பேஸ்புக்கும் டிவிட்டரும் கொண்டு வந்துள்ளன ( https://enterpriseai.economictimes.indiatimes.com/.../135... ). ...