முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சமூக ஊடகத்தின் தலைகீழ் மாற்றம்

 The Government Is Expanding Its Social Media Surveillance Capabilities |  Brennan Center for Justice

இளைஞர் காங்கிரஸாரின் கணக்குகளை முடக்கியதை எதிர்த்து மெட்டா அலுவலகங்களில் காங்கிரஸ் செய்த போராட்டத்தை ஊடகங்களில் பார்த்திருப்பீர்கள். முன்பு ஆளுங்கட்சி ரிப்போர்ட் அடிக்கும் பதிவுகளை மட்டும்தான் நீக்குவார்கள். இப்போது அதைவிட ஆபத்தான காரியம் ஒன்றை சமூக ஊடகங்கள் செய்கின்றன: ஏஐ பயன்படுத்துவது.
உ.தா., பேஸ்புக்கில் நீங்கள் ஒரு பதிவை எழுதிப் பதிவிட்டதும் அதன் ஏஐ அப்பதிவு ஒன்றிய அரசை விமர்சித்து எழுதப்பட்டதா, அவ்விமர்சனத்தில் அரசின் பிம்பத்தை உலக அளவில் பாதிக்கிற வகையில் எழுதப்பட்டுள்ளதா எனச் சோதிக்கிறது. ஏஐயால் இன்று பகடி, விமர்சனம், கோபம் எல்லாவற்றையும் கணிக்க முடியும். ஆகையால் அது தொனியையும் அவதானிக்கிறது. சில வினாடிகளில் உங்கள் பதிவு அரசுக்கு எதிரானதா ஆதரவானதா எனப் பார்த்து எதிர்ப்புப் பதிவுகளை நீக்கிவிடுகிறது. அது மட்டுமல்ல தொடர்ந்து எழுதினால் தடை செய்வோம் என எச்சரிக்கிறது.
இந்தப் புதிய மாற்றம் ஆபத்தானது - மோடிக்கு எதிரான ஜென் ஸீ போராட்டங்களுக்குப் பிறகே இந்தப் புதிய நடைமுறையை பேஸ்புக்கும் டிவிட்டரும் கொண்டு வந்துள்ளன (https://enterpriseai.economictimes.indiatimes.com/.../135...). பல்லாயிரம் ஜெ ஸீ போராளிகளின் கணக்குகள் ஒரே நாளில் முடக்கப்பட்டது அரசின் உத்தரவினால் மட்டுமல்ல, அது ஏஐ மூலம் நிகழ்த்தப்பட்ட ஒரு தானியங்குச் செயலோ எனச் சந்தேகம் எழுகிறது. கண்காணிப்பும், கருத்துச் சுதந்திர முடக்கமும் ஏஐயைக் கொண்டு செய்யப்படும்போது நீங்கள் ஏஐயால் தடை செய்ய முடியாத எழுத்தை மட்டும் எழுகிற நிலைக்குத் தள்ளப்படுகிறீர்கள். வருங்காலத்தில் இந்த அதிகாரத்தை மாநில கட்சிகளும் பெறும் என நினைக்கிறேன். அவர்களும் சமூக ஊடக நிறுவனங்களிடம் தடை செய்யப்பட்ட வேண்டிய கருத்துக்கள், பார்வையைத் தருவார்கள். அதை நிறுவனங்கள் ஏஐயிடம் கொடுத்தால் முழுமையான அரசியல் நீக்கம் நிகழும்.
இதை பேஸ்புக்கின் பக்கத்திலேயே தந்துள்ளார்கள் பாருங்கள்:
How artificial intelligence makes decisions about content
AI teams start by building machine learning models that can recognize what’s in a photo or analyze the text of a post. For example, AI models may be built to learn whether a piece of content contains nudity or graphic content. Those models may then determine whether to take action on the content, such as removing it from the platform or reducing its distribution.
சமூக ஊடகம் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில், கண்காணிப்பில் உள்ள ஊடகம் ஆகிவிட்டது. இனிமேல் இது அரச ஊடகம். பேஸ்புக்கும் எக்ஸும் தம் பெயர்களை பாரதிய ஜனதா புக் என்றும் பாரதிய ஜனதா எக்ஸ் என்றும் மாற்றுவதே பொருத்தம்.
இனிமேல் நாம் பிளாக், அச்சு ஊடகங்கள் வழியாக மட்டுமே சுதந்திரமாக எழுத முடியும் என நினைக்கிறேன். எவ்வளவு வேகமாகக் காலம் மாறிவிட்டது; எல்லாம் தலைகீழாகி விட்டது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு ஏன் க்யானேஷ் குமாருக்கு எதிராகப் பொங்குவதில்லை?

  சினிமா போதையின் பிரச்சினைகளைப் பற்றி தமிழ்நாட்டு எழுத்தாளர்களே தொடர்ந்து அழுது புலம்பி சபித்து சமாதானமாகி இருக்கிறார்கள் இதுவரை. ஆனால் இப்போது முதன்முறையாக வெகுமக்கள் இடையில் சினிமா வெறியர்கள் அரசியல்மயமாவதற்கு எதிர்ப்பு வந்திருக்கிறது. குறிப்பாக 40-70 வயதுக்கு உட்பட்டோர் பேசுவதைக் கேட்டால் புரியும். அரசியல் நோக்கர்களும் இதனால் கசப்படைகிறார்கள். தமிழ்நாட்டினர் எப்படி மூளைச்சலவை செய்யப்பட்டனர் என திருப்பூர் குணாவும், ஜீவாவும், ஆர்.கே. சண்முகவேலும் சேர்ந்து ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார்கள் ("டிஜிட்டல் போதையில் நாம் யாரையும் தேர்ந்தெடுக்கவில்லை"). அவர்கள் சமூகவலைதளச் செயல்பாடுகளும் தரவுப் பகுப்பாய்வுத் தொழில்நுட்பமும் விஜய்யின் வெற்றிக்கு எப்படிப் பயன்பெற்றன என்றே பிரதானமாகப் பேசினாலும் விஜய்யின் சினிமாப் புகழ் அவரை வைத்து நடந்த டிஜிட்டல் பிரச்சாரத்துக்கு அடிப்படை என்பதை அவர்கள் மறுக்கவில்லை. கடந்த தேர்தலின் போதிருந்தே 'தற்குறி' எனும் சொல் இதற்கென மக்களால் பரவலாகப் பயன்படுத்தப்படுவதையும் பார்க்கிறோம். 'தற்குறி' சினிமா ரசிக மனநிலை, சினிமா மந்தைத்தனம் ஆகியவற்றை...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

மனதுக்குள் நடக்கும் ஆட்டம்

  ரொம்ப நாட்களுக்குப் பிறகு இன்றைய இந்தியா நியுசிலாந்து டி20ஐ போட்டியை வெகுவாக ரசித்தேன். முதல் போட்டியில் 225 அடித்தும் வெல்ல முடியவில்லை என்பதை விட நியுசிலாந்தை மற்றொரு விசயம் வெகுவாக வருத்தியது - அவர்களால் பவர் பிளேயைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அபிஷேக் ஷர்மாவும், சஞ்சு சாம்ஸனும் வேகவீச்சாளர்களை அடிக்கிற பாணி அவர்களை மனதளவில் உலுக்கி எடுத்துவிட்டது. ஆகையால் இரண்டாவது போட்டியின் ஆடுதளத்தை மாற்றினார்கள். கொஞ்சம் நின்று வருகிற ஆடுதளத்தைத் தேர்வு பண்ணினார்கள். இந்தியா ஒரு சுழலருடன் ஆடுவதும் நியுசிலாந்து இரு சுழலர்களுடன் ஆடுவதும் மற்றொரு காரணம். ஆகையால் பவர் பிளேவை ஆதிக்கம் செய்தால் இந்தியாவை 140-150க்குள் சுருட்டலாம். முதலில் மட்டையாடும் பட்சத்தில் தாம் 170-180 அடித்தால் கூடப் போதும். அதை வைத்துத் தடுத்தாடலாம் என நம்பினர். இதே திட்டத்தைத்தான் அயர்லாந்தும் இங்கிலாந்தும் கூட அண்மையில் இந்தியாவுக்கு எதிராகப் பயன்படுத்தினர். ஆனால் அந்தத் திட்டம் இரண்டு கட்டங்களில் அவர்களுக்கு வேலை செய்யவில்லை. 1) அவர்களுடைய வேகவீச்சாளர்கள் ஒரு சிக்ஸர் / பவுண்டரி கொடுத்ததுமே பந்தின் நீளத்தை இழுத்து ஷார்...