முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மனதுக்குள் நடக்கும் ஆட்டம்

 ரொம்ப நாட்களுக்குப் பிறகு இன்றைய இந்தியா நியுசிலாந்து டி20ஐ போட்டியை வெகுவாக ரசித்தேன். முதல் போட்டியில் 225 அடித்தும் வெல்ல முடியவில்லை என்பதை விட நியுசிலாந்தை மற்றொரு விசயம் வெகுவாக வருத்தியது - அவர்களால் பவர் பிளேயைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அபிஷேக் ஷர்மாவும், சஞ்சு சாம்ஸனும் வேகவீச்சாளர்களை அடிக்கிற பாணி அவர்களை மனதளவில் உலுக்கி எடுத்துவிட்டது. ஆகையால் இரண்டாவது போட்டியின் ஆடுதளத்தை மாற்றினார்கள். கொஞ்சம் நின்று வருகிற ஆடுதளத்தைத் தேர்வு பண்ணினார்கள். இந்தியா ஒரு சுழலருடன் ஆடுவதும் நியுசிலாந்து இரு சுழலர்களுடன் ஆடுவதும் மற்றொரு காரணம். ஆகையால் பவர் பிளேவை ஆதிக்கம் செய்தால் இந்தியாவை 140-150க்குள் சுருட்டலாம். முதலில் மட்டையாடும் பட்சத்தில் தாம் 170-180 அடித்தால் கூடப் போதும். அதை வைத்துத் தடுத்தாடலாம் என நம்பினர். இதே திட்டத்தைத்தான் அயர்லாந்தும் இங்கிலாந்தும் கூட அண்மையில் இந்தியாவுக்கு எதிராகப் பயன்படுத்தினர். ஆனால் அந்தத் திட்டம் இரண்டு கட்டங்களில் அவர்களுக்கு வேலை செய்யவில்லை.

1) அவர்களுடைய வேகவீச்சாளர்கள் ஒரு சிக்ஸர் / பவுண்டரி கொடுத்ததுமே பந்தின் நீளத்தை இழுத்து ஷார்ட் ஆப் தெ லெங்க்துக்கு மாற்றினார்கள். தொடர்ந்து அடிவாங்கினார்கள். 90களில் ஜெயசூர்யா ஆசிய வேகவீச்சாளர்களை ஆட்டத்திற்கு முன்பே மனதளவில் தோற்கடிப்பதைப் போல இந்த இருவரும் இப்போது பல அணிகளுக்குச் செய்கிறார்கள். அயர்லாந்திலும் இங்கிலாந்திலும் இவர்கள் நல்ல ஆட்டநிலையில் இல்லாததால் அத்திட்டம் வேலை செய்தது. ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது.
2) நமன் தர்ரின் வருகையும் திலக் வர்மா எண் 6இல் நன்றாக ஆடுவதாலும் நிதிஷ் குமார் துபேவை விட நல்ல மட்டையாளர் என்பதாலும் இந்தியாவின் கீழ்மத்திய வரிசையை துவக்க வரிசைக்கு இணையாக பலம் பொருந்தியதாக்கி உள்ளது.
அபாரமான துவக்க ஆட்டம், நியுசிலாந்தின் சுழலர்களின் பிரமாதமான பந்து வீச்சு, சாண்ட்னரின் 4 விக்கெட்டுகள் என ஆட்டம் ஏற்ற இறக்கமாகப் போய் ஒரு கட்டத்தில் இந்தியா வெல்ல வாய்ப்பே இல்லை எனும் நிலையில் இருந்து தர், நிதீஷ், திலக் ஆகியோர் அட்டகாசமாக ஆடி வென்றளித்தனர்.
நியுசிலாந்து இன்னும் நமன் தர்ரின் மட்டையாட்டத்தின் பலவீனங்களைப் புரிந்துகொள்ளவில்லை. அவர் கிட்டத்தட்ட தோனியைப் போன்றவர். கவர் டிரைவ், புல், நேரான சிக்ஸர்கள், மிட் விக்கெட், லாங் ஆன் பகுதிகளில் சிக்ஸர்கள் அவருக்கு நன்றாக வரும் (ஹுக்கைத் தவிர). அவரைத் தடுக்க பந்துகளை வைடாக யார்க்கர் நீளத்திலோ மெதுவாகவோ போட வேண்டும். அதாவது எக்ஸ்டிரா கவருக்கு வெளியே வைடாக. மற்றொரு பந்து வைடான அரைக்குறிப் பந்துகள். வருங்காலத்தில் எதிரணியினர் இந்த யுக்தியைப் பயன்படுத்துவார்கள் என நினைக்கிறேன். இம்முறை நியுசிலாந்தின் யுக்தி மோசமாக இருந்தது. திலக்கிற்கு சரியான இடம் அவரது காலுக்குள் போடுவது. மூன்று பந்துகள் அவரது பேடில் லெக் ஸ்டம்பில் என்றால் இரண்டு பந்துகள் யார்க்க நீளத்திலோ பவுன்சராகவோ வெளியே போடுவது. ஏனென்றால் திலக்கிற்கு மட்டையை வீச இடம் கொடுக்காவிட்டால் அவர் நிலையாக நின்று கால் பக்கம் அடிக்க சிரமப்படுவார். அடுத்து அவர் பாயிண்டுக்கு மேல் கட் அடிக்க மாட்டார். பத்தொன்பதாவது ஓவரில் ஸ்மித் கால் பக்கமாகப் போடத்தான் முயன்றார். நன்றாகவும் போட்டார். திலக் புத்திசாலித்தனமாக அதை உணர்ந்து ஸ்கூப் பண்ண அது எட்ஜ் வாங்கி நான்கு போனது. ஆனால் ஸ்மித் பயந்து போய் அடுத்தடுத்து பந்துகளை ஸ்டம்புக்கு வெளியே தவறான நீளத்தில் வீசி ரன் கொடுத்தார். அப்படித்தான் இந்தியா வெல்லும் நிலையை எட்டியது. நியுசிலாந்திடம் இருந்த திட்டங்கள் கூட நெருக்கடியின் போது காணாமல் போயின. ஆனாலும் இந்த சொதப்பல்களைப் பயன்படுத்தி அடிக்க மனத்திடமும் திறமையும் வேண்டும். அது திலக்கிடம் இருந்தது.
அபாரமான ஆட்டம்!
வரும் போட்டிகளில் நியுசிலாந்து இப்படியான சிரமமான ஆடுதளங்களில் ஆடுவார்களா அல்லது தட்டையான ஆடுதளங்களுக்குப் போவார்களா என்று காத்திருந்து பார்க்க வேண்டும்.
பின்குறிப்பு: திலக்கும் நித்தீஷும் தெலுங்கில் கூட்டணியின்போது உச்சஸ்தாயில் தலைகளை ஆட்டி சொல்வீச்சில் ஈடுபவதைக் கேட்க அவர்கள் திட்டுகிறார்களா பாராட்டுகிறார்களா எனப் புரியவில்லை. அவ்வளவு இனிமையான மொழி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இன்று அவளது ஐம்பதாவது திருமண நாளாக இருக்க வேண்டும் (ஆன் கார்ஸன் கவிதைகள் 3)

  ரொமானிய சுவரை நோக்கி உரையாற்றுகிறது குளிர் - ஆன் கார்ஸன் - தமிழில் ஆர். அபிலாஷ் ஒளி மட்டற்று ( சிறைப்படுத்தப்பட்டது ) மேலும் , நிழல்கள் விழக் காத்திருக்கின்றன தலைமறைப்புகளைப் போல . மூளை தட்டுகிறது இருமுறைகள் உப்புக்காக .   WOULD BE HER 50TH WEDDING ANNIVERSARY TODAY Cold orates upon a Roman wall. Light is extreme (caught) and shadows wait like hoods to drop. Brain taps twice for salt. Was it Ovid who said, There is so much wind here stones go blank. (Excerpt From Decreation, Anne Carson) வாசகக் குறிப்பு : இதுவும் ஒரு கீறல் ஓவியம் போன்ற கவிதைதான் . விளக்கக் குறிப்புகளோ விவரணைகளோ இல்லை . கதையாடல் கவிதையென்றாலும் யார் , என்ன , எப்படி , ஏன் ஆகிய தகவல்களை நாமே அனுமானிக்க வேண்டும் . இப்போது ஒவ்வொரு சொல்லும் ஒரு உருவகமாகிறது ( ஏனெனில் தலைப்பில் உள்ள திருமண பந்தம் குறித்த விபரம் இதைக் குறியீடாக்காமல் தடுக்கிறது ). ஐம்பதாவது திருமண நாளெனில் அவருக்கு வயது 70 இருக்குமா ? அவர் ரொமானிய வரலாற்றுச் சின்னங்களைக் காண வந்...

இருளின் காலம்

ஊடகவியலாளர்களைக் கொத்துக்கொத்தாகக் கைது பண்ணுகிறார்கள் எனும்போதே நெருக்கடி நிலை ஆரம்பித்துவிட்டது ஊர்ஜிதம் ஆகிறது. அதுவும் போராட்டங்களைப் பதிவு பண்ணுவதற்குப் போனவர்களை. ஒட்டுமொத்தமாக போராடுபவர்களைத் தூக்கிச் சிறையில் வைப்பது, அவர்களைக் குறித்த விபரங்கள், காணொளிகள், செய்திகள் வெளிவராமல் பார்ப்பதே பாஜக அரசின் திட்டம். இனி அடுத்து என்னவெல்லாம் செய்வார்கள்? எதிர்க்கட்சிகளின் செயல்பாட்டாளர்களை கண்ட இடத்தில் கைது, மறைமுகமாக பல ஊடகங்கள் முடக்கம், மக்கள் சில பகுதிகளில் பயணிக்க மறைமுகத் தடை, எந்தெந்த விசயங்கள் ஊடகங்களில் பேசப்படலாம் என்பதற்கான மறைமுக அறிவுறுத்தல் எனப் போகும். முடிவில் எதிர்க்கட்சிகள் தாம் ஆளும் மாநிலங்களில் போராடினால் ஆட்சிக் கலைப்பு நடக்கும். ஆளுநர் ஆட்சி வரும். இப்போதைக்கு நீதிமன்றங்கள் பிணை வழங்குவதால் சிறிது அவகாசம் போராளிகளுக்கும் எதிர்க்கட்சியினருக்கும் கிடைத்துள்ளது. வெளிவர முடியாத சட்டங்களில் கைது நடக்கும்போது நிலைமைத் தீவிரமாகும். ராகுல் காந்தி இப்போராட்டங்களை முன்னறிந்து பாராளுமன்றத்தில் பேசியது நினைவுக்கு வருகிறது. அதாவது கரப்பான்கள் தோன்றும் முன்பே இப்படியான போராட்ட...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.