முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இன்று அவளது ஐம்பதாவது திருமண நாளாக இருக்க வேண்டும்

 ரொமானிய சுவரை நோக்கி உரையாற்றுகிறது குளிர்

- ஆன் கார்ஸன்

- தமிழில் ஆர். அபிலாஷ்

ஒளி மட்டற்று (சிறைப்படுத்தப்பட்டது)

மேலும், நிழல்கள் விழக் காத்திருக்கின்றன

தலைமறைப்புகளைப் போல.

மூளை தட்டுகிறது

இருமுறைகள்

உப்புக்காக.  


WOULD BE HER 50TH WEDDING ANNIVERSARY TODAY


Cold orates upon a Roman wall.

Light is extreme (caught)

and shadows wait like

hoods to drop.

Brain taps

twice

for salt.


Was it Ovid who said, There is so much wind here stones go blank.

(Excerpt From Decreation, Anne Carson)



வாசகக் குறிப்பு: இதுவும் ஒரு கீறல் ஓவியம் போன்ற கவிதைதான். விளக்கக் குறிப்புகளோ விவரணைகளோ இல்லை. கதையாடல் கவிதையென்றாலும் யார், என்ன, எப்படி, ஏன் ஆகிய தகவல்களை நாமே அனுமானிக்க வேண்டும். இப்போது ஒவ்வொரு சொல்லும் ஒரு உருவகமாகிறது (ஏனெனில் தலைப்பில் உள்ள திருமண பந்தம் குறித்த விபரம் இதைக் குறியீடாக்காமல் தடுக்கிறது). ஐம்பதாவது திருமண நாளெனில் அவருக்கு வயது 70 இருக்குமா? அவர் ரொமானிய வரலாற்றுச் சின்னங்களைக் காண வந்திருக்கிறாரா? கடுங்குளிர். எந்தளவுக்கு என்றால் குளிர் பேசுவதைப் போலத் தோன்றுகிறது. குளிரின் இடையறாத சொற்கள் அவரது காதுக்குள் ஒலிக்கின்றன. குளிர்மை இங்கு உணர்வின்மை, அன்பின்மை, மனிதநேயமின்மை, கருணையின்மை இப்படி ஒரு பொருளில் வருகிறது. உணர்ச்சியே இல்லாத ஒரு உரையை அது ஆற்றிக் கொண்டு இருப்பது கவிதையில் வரும் பாத்திரத்துக்கு / கவிஞருக்கு இவ்வாழ்வு குறித்து உள்ள பார்வையைக் காட்டுகிறது. அடுத்து, அங்கு ஒளி மிகுதியாக உள்ளது. தாங்க முடியாத எல்லைக்கு அப்பால் ஒளி ததும்புகிறது. அவருக்கு கண்கள் கடுக்கின்றன. தன் எண்ணங்கள், உணர்வுகள் ஊடுருவிப் பார்க்கப்படுவதாகத் தோன்றும் அளவுக்கு ஒளியின் பிரகாசம் அவரைத் துளைத்தெடுக்கிறது. இந்த மிகை ஒளியை அவருக்கு உள்ளிருந்து பெருகி வரும் பிரக்ஞையாகவும் அர்த்தப்படுத்தலாம். மாலை மங்கியதும் விழுந்து கவிவதற்காக நிழல்கள் காத்திருக்கின்றன என்கிறார் கவிஞர். அதாவது மரணம் படிக்கட்டிலேயே காத்து நிற்கிறது. நமது அறிவு, புரிதல், பிரக்ஞை மங்கத் தொடங்கியதும் மரணத்தை நோக்கி நாம் நடைபோடத் தொடங்குகிறோம். அது தலைமறைப்பைப் போல நம்மை மூடிப் பாதுகாக்கக் காத்து நிற்கிறது. என்ன ஒரு அழகான உவமை! அதன்பிறகு உடல் அவருக்குத் தன்னை நினைவுபடுத்துகிறது. உப்பு (சோடியம்) உடலின் பராமரிப்புக்கு அவசியமானது. உப்பைக் கொண்டே நாம் உணவையும் கெட்டுப் போகாமல் பாதுகாக்கிறோம். உப்பைக் கேட்கும்போதே மூளை தான் உயிர்த்திருப்பதன் அவசியத்தையும் கவிஞருக்கு நினைவுபடுத்துகிறது. வாழ்வு மரத்துப் போவது, அதீதமான தன்னுணர்வும், அறிதலும் மனிதர்களை கடும் துன்பத்தில் வீழ்த்துவது எல்லாவற்றையும் மீறி இந்த உடலுடன் இருத்தலே வாழ்தல் என கவிதை சொல்லி முடிகிறது. இப்போது அப்பெண்ணின் திருமண நாளைக் குறித்து யோசிக்கலாம் - அவருக்கு என்னவாயிற்று? மணமுறிவா? மரணமா? உறவில் கசப்பேற்பட்டு தனிமையா? நினைவேக்கமா? மரணம் குறித்த நினைவுகளா? எதுவோ ஒன்று அவரை ஒட்டுமொத்த இருத்தலையும் குறித்து மீள்பார்வை செய்ய வைக்கிறது. 

 இவ்வளவு விசயங்களையும் மிகச் சொற்பமான வரிகளில் அகழ்வியல் ஆய்வாளர்கள் எலும்புத் துண்டுகளை வைத்து உருவாக்கிய ஓவியத்தைப் போல சொல்லிவிடுகிறார் கார்ஸன். 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

Counterarts இதழில் வெளிவந்துள்ள என் கட்டுரை

"There has always been a permanent child within Kafka. Society functions as an extension of the office and the family, constantly monitoring and evaluating people and subjecting them to the examination of its rules. In other words, even when Kafka leaves home to go to work, and even afterwards, he remains within the family. Within the family, he is always a son or a brother. The family preserves itself through continuous self-surveillance and mutual surveillance. The same thing happens outside it." https://medium.com/counterarts/kafkas-diaries-735b74cd0c44