முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கவனம் திருப்பித் திருடும் பழைய உத்தி



 

செய்தி: //தமிழகம் முழு​வதும் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்​துக்கு ரூ.5 லட்​சம் முதல் ரூ.30 லட்​சம்வரை அமைச்​சர்​கள் லஞ்​சம் பெறு​வ​தாக தவெக பெண் வழக்​கறிஞர் ஒரு​வர் வழக்கு தொடர்ந்​துள்​ளார்.

இது தொடர்​பாக விழுப்​புரத்தை சேர்ந்த தவெக வழக்​கறிஞரணி நிர்​வாகி​யான எம்​.​ஞானசவுந்​தரி, சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு​: தமிழகம் முழு​வதும் உள்ள நீதி​மன்​றங்​களில் அரசு வழக்​கறிஞர்​களை நியமிப்​பது தொடர்பாக தமிழக அரசு கடந்த ஜூன் 5-ம் தேதி அறி​விப்​பாணை வெளி​யிட்​டது.//
இதை சுமார் 120 கோடி மதிப்பிலான ஊழல் என்கிறார்கள். வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. தவெக மாவட்டச் செயலாளர்களைக் கொண்டு எல்லா மாவட்டங்களிலும் பட்டியலில் உள்ள வழக்கறிஞர்களிடம் பேசி வாங்கியிருக்கிறார்கள். ஒரு கட்சியின் ம.செக்கள் தலைமைக்கு - அமைச்சர்களுக்கு - தெரியாமல் இதைச் செய்ய முடியாது என்பது பொது அறிவு. இம்மாதிரி ஊழல்கள் ஒவ்வொரு துறைக்கும் மாதாமாதம் நடந்தால் வருடத்திற்கு எவ்வளவு வரும்?
நான் என்றுமே தவெக ஒரு தூய ஆட்சியை நடத்துகிறது என நம்பியதில்லை என்பதால் எனக்கு இது ஒரு பிரச்சினையாகத் தெரியவில்லை. இது இயல்பு. ஊழலுக்குத் தீர்வு புதிய கட்சியல்ல. அது வேறொரு விவாதம். இங்கு கவனிக்க வேண்டியது இம்மாதிரி குற்றங்களை விமர்சித்துப் போராட வேண்டியது திமுகவும் அதிமுகவும்தான், ஆனால் களத்தில் நின்று ஆடுவது அவர்கள் அல்லர், பாஜகதான் என்பதே.
ஒரு படத்தில் ஒரு சின்னப் பையனை அனுப்பி கவனத்தைத் திருப்பி வடிவேலுவிடம் சிறுநீரகத்தைத் திருடுவார்களே அந்த உத்தியைத்தான் தவெக திமுகவிடம் செய்து கொண்டிருக்கிறது. தொடர்ச்சியாக அற்ப பிரச்சினைகளுக்குக் கைது, பல்வேறு ஊழல் புகார்கள், முன்னாள் அமைச்சர்களை இந்நாள் அமைச்சர்களை வைத்து இழிவுபடுத்துவது, திமுக தலைவரை சட்டமன்றத்திலேயே விஜய் இழிவுபடுத்துவது என ஒரு பக்கமும் அதிமுகவின் எம்.எல்.ஏக்களை பதவி விலக வைத்து அபகரிப்பது என அவர்களை இன்னொரு பக்கமும் பரபரப்பாகவே வைத்திருக்கிறார்கள். பாஜகதான் நிறைய அவகாசத்துடன் ஜாலியாக இருக்கிறார்கள் - அவர்கள் மீது விஜய்யால் கை வைக்க முடியாது. ஆட்சியைக் கலைப்பார்கள் அல்லது கைது பண்ணி உள்ளே தள்ளுவார்கள்.
தமது நிர்வாக சீர்கேடுகளை, குழப்படிகளை, ஊழல்களை திமுக பேசக் கூடாது, அவர்களை எதையாவது செய்து பதிலடி கொடுப்பதிலும் பிணை வாங்குவதிலும் அலைய விட வேண்டும் என்பதே தவெக அமைச்சர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் விஜய்-லாட்டரி கும்பல் தந்துள்ள இடுபணி. அதற்காக அடுத்தடுத்து ஜோக்கர்களைக் களமிறக்கிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் தைரியமிருந்தா வாடா என தெருவில் நின்று சவடால் விட்டுக்கொண்டே இருப்பார்கள். தெருவில் இறங்கினால் ஓடிவிட்டு அதை ஒரு செய்தியாக்கி சிறுநீரகத்தை உருவுவார்கள். முந்தைய ஆட்சியில் குற்றம் சாட்டப்பட்டு வழக்கைச் சந்தித்து வருவோர், கட்சி மாறி தவெக வந்தவர்களை வைத்து திமுக மீது தனியார் பள்ளிகளிடம் இருந்து பணம் பெற்றதாக குற்றச்சாட்டை வைக்கும்படி ஒரு தவெக அமைச்சர் கேட்டார் என ஜூனியர் விகடனில் செய்தி வந்ததாக ஒரு காணொளியில் கண்டேன். இந்தக் குற்றச்சாட்டு உண்மையா என்பதை விட இதன் உத்தேசமான தம் மீதான ஊழல் புகார்களை திமுக பேசக் கூடாது என்பதே சுவாரஸ்யமானது. ஒரு வழக்கை எதிர்கொண்டு அது பொய் என நீங்கள் நிரூபிக்கும் முன்பு இவர்கள் பல லட்சங்களைக் கொள்ளையடிப்பார்கள்.
இந்த தெருச்சண்டைகளை விவாதிக்க வேண்டும் என்பதே டிவி அலைவரிசைகளின் எடிட்டர்களுக்கும் அவர்கள் தந்துள்ள இடுபணி.
அதிமுகவையும் தொடர்ந்து செங்கல் செங்கல்லாக உருவாகி பலவீனப்படுத்துவது அடுத்த இடுபணி. இந்த கவனம் திருப்பித் திருடுவது ஜேப்படித் திருடர்களின் பழைய பாணி. மேலும் தம் ஊழலை, நிர்வாகக் கேட்டைப் பற்றிப் பேச எதிர்க்கட்சிக்குத் தகுதியே இல்லையென ஒரு நரேட்டிவ்வை உருவாக்குவார்கள். இந்த விளையாட்டை தம்மையே உருவாக்கி விட்ட பாஜகவிடம் விஜய்யால் ஆட முடியாது. ஆகையால் இனி அவர்கள் தெளிவாக இவர்களை அடிப்பார்கள்.
இப்படித்தான் நடக்கப் போகிறது, தவெக vs பாஜக என களத்தை மாற்றப் போகிறார்கள், தவெக தன்னை தூய திமுகவாக பாவிக்கும், பாஜக தன்னை எதிர்க்கட்சி திமுகவெனக் காட்டும்படி நாடகம் ஆடும், திமுகவோ அதிமுகவோ களத்திலே இல்லாதது போல ஊடகங்கள் சித்தரிக்கும் என நான் இந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தபோதே எழுதினேன். அது நடக்கத் தொடங்கிவிட்டது. திமுகவை கட்டம் கட்டி வைக்க இப்படி ஒரு மலிவான ஆட்டத்தை ஆடுவார்கள் என்று மட்டும் கணிக்கவில்லை. ஏனென்றால் யாருமே எதிர்பார்க்காதபடிக்கு திருடர்களைப் போல அரசியல் செய்யும் கட்சி இது. இவர்கள் ஆண்டு முடிக்கும்போது இப்படியெல்லாம் செய்ய முடியுமா என நம்மை மூக்கில் விரல் வைக்கும்படிப் பண்ணுவார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...