முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தவெக வெற்றியும் வாக்காளர் நீக்க மோசடியும்


Explained: Why is the opposition protesting against India's election  commission?

தவெக சில புதிய முதலீட்டிய சக்திகளால் ஆட்சிக்குக் கொண்டு வரப்பட்டது, ஆட்டுவிக்கப்படுகிறது என இடதுசாரிகள் சொல்வதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் பல்லாயிரம் கோடிகள் நிதியும் ஊடக ஆதரவும் மட்டுமே ஒரு கட்சியை சட்டென ஆட்சிக்குக் கொண்டு வராது. அதுவும் முழுமையான மக்கள் ஆதரவு இல்லாத, பெரும்பான்மை மக்களின் வாக்குகளை வெல்லாத ஒரு கட்சியை முதலாளிகளால் மட்டுமே வெல்ல வைக்க முடியாது. அங்குதான் தேர்தல் ஆணையர் க்யானேஷ் குமார் உள்ளே வருகிறார். அவரது தேர்தலில் சிறப்புத் தீவிர திருத்தம் எனும் வாக்குத் திருட்டும்தான் தவெக வெல்ல உதவியது. மிக அதிகமாக வாக்காளர்கள் நீக்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தவெக வென்றுள்ளதை ஹிந்து நாளிதழ் சுட்டிக் காட்டியுள்ளது. இது போக தவெக வென்ற சில தொகுதிகளில் வாக்கு எந்திரங்கள் சரியாக வேலை செய்யாதது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதை தேர்தல் ஆணையம் மறுக்கவும் இல்லை. முக்கியமாக, இது தற்செயலாக நடந்ததல்ல. அதாவது இந்த வாக்காளர் நீக்க மோசடி நிகழாதபட்சத்தில் தவெக உச்சபட்சமாக 50-80 இடங்களைக் கடந்திருக்காது. திமுகவும் அதிமுகவும் அழிக்கப்பட வேண்டும் என க்யானேஷ் குமார் விரும்பியுள்ளார். அதனாலே அவர் மக்களின் விருப்பத்தையும் மீறி ஒரு கட்சியை முறைகேடாக ஆட்சியில் அமர்த்துகிறார். க்யானேஷ் குமார் மோடியின் கையாள். இதை இன்று இந்தியா முழுக்கப் பேசுகிறது. ஆனால் 'தமிழ்நாட்டு அறிவாளிகள்' மட்டுமே தேர்தல் ஆணையத்தைப் பிடிவாதமாக நம்புகிறார்கள். வரும் நாட்களில் இடதுசாரிக் கட்சிகளே இதை நேரடியாகப் பேசி போராட்டத்திற்கு வருவார்கள். நாம் இதை வருங்காலத்தில் மறுக்கவே முடியாது. திருட்டு அம்பலமாகிவிட்டது. அதற்கு சாட்சியமே இன்று நாடு முழுக்கப் பரவி வரும் போராட்டங்கள்.
தவெக பாஜகவின் கருவி என்பதற்கு
க்யானேஷ் குமாரையும் வாக்காளர் நீக்க முறைகேட்டையும் தவிர வேறென்ன ஆதாரம் வேண்டும்?

பின்குறிப்பு: இப்போதைக்கு இந்த மோசடியை
க்யானேஷ் எப்படியெல்லாம் நடைமுறைப்படுத்தினார், அவரது இலக்குகளாக யாரெல்லாம் இருந்தார்கள், இருக்கிறார்கள் என்பது முழுமையாகத் தெரியாது. அதனாலே கேரளாவில் ஏன் பாஜக வெல்லவில்லை என்பதான 'புத்திசாலித்தனமான' கேள்விகளைத் தவிர்க்கவும். அவர்கள் தேர்ந்தெடுத்து சிலரை வெல்ல அனுமதித்திருக்கிறார்கள், சிலரை முறியடித்திருக்கிறார்கள் என்பதை மட்டுமே இப்போதைக்குச் சொல்ல முடியும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...