முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

"ஏன் வாசிக்க வேண்டும்?" விமர்சனம் - அன்புக்குமரன் எத்தியரசன்

 


புத்தகம்: ஏன் வாசிக்க வேண்டும்
எழுதியவர்: எழுத்தாளர்: Abilash Chandran
வாங்கிய இடம்: சீரோ டிகிரி அரங்கு, சென்னை புத்தகக் கண்காட்சி
வாங்கிய தேதி : 02 மார்ச் 2022

"வாசிப்பது எப்படி?" என்ற புத்தகத்தை அண்மையில் வாசித்தபோது , அதன் தொடர்ச்சியாய் "ஏன் வாசிக்க வேண்டும்?" என்ற புத்தகத்தையும் வாசிக்க நேரிட்டது. நம் வாழ்வாதாரத்தை முன் வைத்து வாசிப்பின் தேவை குறித்து புத்தகத்தின் வாசத்தை நுகராதவர்களுக்கு ஒரு அறிமுக நூலாக இருந்தது செல்வேந்திரன் அவர்களின் கட்டுரை தொகுப்பு. ஆனால் எழுத்தாளர் அபிலாஷ் ஏன் வாசிக்க வேண்டும் என்ற கேள்விக்கான பதிலை மிக விரிவாகவும் நேர்மையாகவும் (வாசிப்பும் ஒரு போதைதான் என்பது போன்ற கருத்துகள் ஊடாக ) தனது கருத்துகளை தனது பிரஞையினால் நமக்கு கடத்தியிருக்கிறார்.

எழுத்தாளர் அபிலாஷ் அவர்களின் முகப்புத்தக பதிவுகளை சில வருடங்களுக்கு முன்பாக பின்தொடர்ந்தேன். அதன் நீட்சியாக ஒரு நாள் ஹருதயம் என்ற மலையாளதிரைப்படத்தை பற்றிய இவரது கட்டுரையால் கவரப்பட்டேன். அப்படி ஒரு பகுப்பாய்வு. அவரின் அவதானிப்புகள் மிகவும் ஆழ் நிலையில் இருப்பதை உணர்ந்தேன். பின்பு பல கட்டுரைகளை வாசித்தேன். அண்மையில் தனது உடல் இடையை குறைக்கும் பொருட்டு அவர் மேற்கொண்ட சில வாழ்வியல் முறைகளை அறிவியல் பூர்வமாகவும் பல அளவுறுகளை முன்வைத்து எழுதியதை ஓர் அளவு பின்பற்றி நானும் என் இடையை குறைத்தேன். ஆக வாசிப்பில் தொடங்கி இவரது எழுத்துகள் என்னை ஓர் செயல் வீரனாகவும் மாற்றியிருக்கிறது.

ஏன் வாசிக்க வேண்டும் புத்தகத்தில் ஒரு பக்கம் கூட ....ஏன் ஒரு வரி கூட சோடை போகவில்லை. அத்தனையும் அறிவின் முத்துக்கள். அதுவும் நாம் பெருமளவு அறியாத அறிவுப்பண்டங்களை சுவைத்தபோது இருந்த ருசி இன்னும் என் மனதில் ஆழப் பதிந்திருக்கிறது. எனது நீண்ட நாள் கேள்விகான பதிலை நினைவுத் திறனும் வாசிப்பும் என்ற கட்டுரையில் காணமுடிந்தது.
அசல் சிந்தனையாளருக்கான அனைத்து குணங்களும் இவரது எழுத்துக்களில் கண்டடையலாம். இலக்கிய வாசிப்பு என்ற இரண்டாம் பாகத்தில் இவர் யாருமே இதுவரை காணாத அல்லது உணராத வகையில் பல உளக்காட்சிகளை எனக்கு காண்பித்தபோது வியந்தேன். வாசிப்பது மூளையா மனமா என்ற ஒற்றை கட்டுரையிலேயே எனக்கு தெரிந்துவிட்டது இரண்டாம் பாகம் மிகவும் உக்கிரத்துடன் version 2.0 வாக மிளிர்கிறது என்று.

இந்த கட்டுரையில் நமக்கு கிடைக்கும் அனுமானங்களை கடப்பதே ஒரு தன்னினைவிழந்த நிலைக்கு சென்றது போலான அனுபவம். இதைத் தொடர்ந்து என்னை மேலும் வியப்பில் ஆழ்த்தியது. ஆங்கிலத்தில் வாசிப்பது என்ற கட்டுரை மற்றும் ஒரு தலைசிறந்த (எல்லாமே நல்ல கட்டுரைதான்! ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல ) கட்டுரை. அயல் எழுத்தின் தாக்கம் நம் எழுத்தாளர்களின் எழுத்தின் மீது உண்டு என்பதை மிக அழகாக நிறுவியுள்ளார். உதாரணங்களை சுட்டிக்காட்டி சொற்றொடர்களின் வடிவத்தைக் கண்டுபிடித்து அந்த பாங்கு அவர்களின் எழுத்தை எப்படி தன சமகால எழுத்தாளர்களோடு தங்களை வேறு படுத்தியது என்பதையும் கச்சிதமாக சான்றுகளுடன் விளக்கியிருக்கிறார் (கையும் களவுமாகப் பிடித்தார் என்றும் சொல்லலலாம் ) . உதாரணம்: "கையைத் தேடிக்கொண்டு தயங்காமல் தன் கையை நீட்டி குலுக்கினான் " என்ற சொற்றொடர் அமைப்பு ("Looking for the hand, he unhesitatingly extended his hand and shook it."). எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் உரைகளில் வரும் சில வார்த்தைகளின் கட்டுமானத்தன்மையில் ஆங்கில தாக்கம் இருப்பதாக அவ்வப்போது உணர்ந்ததுண்டு. ஆனால் அபிலாஷ் அவர்களின் அவதானிப்பு மிக தீவிரமானதாக உள்ளது. தமிழர்கள் vs மலையாளிகள் என்ற கட்டுரையை மிகவும் ரசித்தேன். மறுபுறம் நாம் செல்லக்கூடிய பாதை மிகவும் தொலைதூரம் உள்ளது என்பதை கருத்தில் கொண்டு நான் இருப்பு உணர்வுக்கு திரும்பினேன்.

புத்தகத்தின் தலைப்பு சாதாரணமாக தட்டையாக இருக்கலாம். ஆனால் அதன் உள்ளடக்ககம் அனைத்திலுமே அவ்வளவு விவரக்குறிப்புகளுடன் விரிவான மற்றும் மறுக்க முடியாத ஞானத்தை கண்டடைந்து நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார். இந்த புத்தகம் ஒரு "Masterpiece". வாசித்தல் என்ற தலைப்பு இன்னும் பொருத்தகமாக இருக்கும்.

இவர் எழுதிய மற்ற புத்தகங்களை வாசிக்க ஆவலாக உள்ளேன்.

#readgasm

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

சினிமாவும் சர்வாதிகாரமும்: யோசா சொல்வதென்ன?

  காட்சி ஊடகம் நமக்குப் பொழுதுபோக்க உதவுகிறது என்றாலும் அது அடிப்படையில் மனிதரைச் சிந்திக்க விடாமல் செய்து செயலூக்கத்தை ஒழிக்கிறது, இது சர்வாதிகாரத்தை நோக்கி இட்டுச் செல்கிறது என்று சில மாதங்களுக்கு முன் நான் விஜய்யின் வருகையை ஒட்டி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். இன்று தற்செயலாக மரியோ பார்கஸ் யோசாவின் ஒரு கட்டுரையைப் படித்தால் அதில் அவர் கிட்டத்தட்ட அதே கருத்தைத்தான் சொல்கிறார். காட்சி ஊடகங்களின் ஆதிக்கம் உள்ள சமூகம் சர்வாதிகாரத்துக்கு எதிராகச் செயல்பட முடியாமல் முடங்கும் என்கிறார்: (...) making the present unreal, turning actual history into fiction has the effect of demobilising the citizen, making him or her feel exempt from any civic responsibility, encouraging the conviction that it is beyond anyone's reach to intervene in a history whose screenplay is already written. Along this path we may well slide into a world where there are no citizens, only spectators, a world where, although formal democracy may be preserved, we will be resigned to the kind of lethargy dictatorships asp...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...