முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஹிட்லர் விஜய்

 விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட ஆர்ப்பாட்டத்தை நடத்தி இந்த இளைஞர்களுடன் நிற்க வேண்டும். ஏனென்றால் ஹிட்லரை அவரது ஆரம்ப காலத்தில் எதிர்க்கட்சியினர் சற்று மென்மையாக எதிர்கொண்டார்கள். அலட்சியமாக எடுத்துக் கொண்டார்கள். அதன் விளைவு மிக மோசமாக இருந்தது. பாசிஸ்டுகள் அடிப்படையில் பயந்தாங்கொள்ளிகள், ஆனால் கொடூரர்கள். அதாவது துணிச்சலற்ற குரூர மனம் படைத்தவர்கள் அவர்களைத் துணிந்து எதிர்க்காவிட்டால் மிக மிக மோசமான செயல்களைச் செய்வார்கள். எதிர்த்தால் பின்வாங்குவார்கள். கொஞ்சம் விட்டுக் கொடுத்தால் எதிர்பாராத தீமையொன்றைச் செய்வார்கள். மீண்டும் பதுங்குவார்கள். ஹிட்லரின் வரலாறு இதுதான். விஜய்யின் வேடிக்கையான கேளிக்கையான பிம்பத்தை வைத்து அவரை யாரும் எடை போடக் கூடாது. அவரது இயல்பின் ஆழத்தில் துளி கூட இரக்கமற்ற, யாரிடமும் அன்பற்ற வெறுப்பின் வடிவம் அவர். பிறரை நேசிக்க இயலாத அவரைப் போன்ற ஆட்சியாளர்கள் மிக மோசமான கொடுங்கோலர்களாக மட்டுமே இருப்பார்கள். தாம் செய்வது தவறென்று கூட அவர்களின் மண்டைக்குள் கடைசி வரை ஏறாது. இயல்பான மக்களுக்குள்ள குற்றவுணர்ச்சி, இரக்கம், பிறரது நிலையைப் புரிந்துகொள்ளும் கற்பனை விஜய்யைப் போன்றோருக்கு இராது. இவரையெல்லாம் கண்டிப்பதில் அர்த்தமில்லை.

கருத்துகள்

Boomi இவ்வாறு கூறியுள்ளார்…
பாசிசத்தை எதிர்த்து தொடர்ந்து குரல் எழுப்பும் உங்களுக்கு நன்றி.இதற்கு கம்யூனிஸ்டுகள் துணை போவது புரிந்து கொள்ள முடியவில்லை.
ஆர். அபிலாஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
வணக்கம் பூமி. கம்யூனிஸ்டுகளின் சீரழிவு மிகவும் வருத்தம் அளிக்கிறது. அவர்களுடைய தலைமையின் நிலைப்பாட்டுக்கு எதிராக அவர்களுடைய தலைவர்களே பேசுவதைப் பார்க்கிறோம். வீழ்ச்சியின் காரணம் எனக்கும் புரியவில்லை.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...