முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

துன்பமின்றி துன்பத்தை எழுதுவது




புக்காவஸ்கியை வாசிப்பது எப்போதுமே மிகச்சிறந்த மதுவை அருந்தும் அனுபவம். அவரது மிகச்சிறந்த படைப்புகள் செக்ஸில் திளைப்பதற்கு ஈடான புலனின்பத்தைத் தருவதுண்டு. ஆனால் "ஹாலிவுட்" ஒரு தரமான மது மட்டுமே. ஒரு நாவலாக இது எழுந்து வரவில்லை. அவரது அனுபவங்களின் குறிப்புகள் அவரது திரைக்கதை படமாக்கப்பட்டதை ஒட்டித் தொகுக்கப்பட்டுள்ளன. படத்துக்கான திட்டமிடலிலும் துவங்கி படம் எடுத்து வெளியாகி அதை ஒரு மாதத்திற்குப் பின் புக்காவஸ்கி ஒரு திரையரங்கில் குறைவான பார்வையாளர்கள் மத்தியில் பார்த்துவிட்டு ஒருவித நிறைவற்ற நிறைவுணர்வுடன் வெளிவருவதுடன் நாவல் முடிகிறது. ஆனால் அது சரியான முடிவு அல்ல. நாவலின் மையச் சிக்கலை அவர் கண்டடையவே இல்லை. முழுக்கவே வெளியுலகின் அலைகழிப்புகள் மத்தியில் அவர் தன்னைக் கண்டடையும் தத்தளிப்பு தெரிகிறது. ஒரு படைப்பாளியாக அவரது வலிமை இந்த அகவுலகம்தான். அவரது அந்தரங்கமான அன்றாட உலகம்தான். சினிமா உலகின் பல சிக்கல்களை, வேடிக்கைகளை, அபத்தங்களை, தனிமனிதர்களுக்கு அது இழைக்கும் கொடூரங்களைப் பற்றிப் பேசும் கவனம் புக்காவஸ்கியின் ஆதாரமான நெருக்கடிக்குள் நாவலைக் கொண்டு செல்ல விடாமல் தடுக்கிறது. இப்புறவுலகிலும் அவர் ஒரு அர்த்தத்தைக் கண்டுபிடித்து வடிவமைக்க முயலவில்லை. போதையில் உடலுறவு கொள்ள முயன்று தோல்வி அடைவதைப் போல நாவலின் முயற்சி ஆகிவிடுகிறது.

இந்நாவலின் சிறப்பு அவர் வாழ்வில் கண்ட சில படைப்பாளிகள், இயக்குநர்கள், நடிகையரை அவர் (பெயர்களை மாற்றி) பகடியாகவும் எதார்த்தமாகவும் சித்தரிக்கும் பகுதிகள். மிகவும் நகைச்சுவையான, வாசகரை வாய்விட்டுச் சிரிக்க வைக்கும் வர்ணனைகள்.

புக்காவஸ்கியின் நாவல் சுமாராக இருந்தாலும் அதை நாம் சோர்வாக கசப்பாக கீழே வைக்க மாட்டோம். இந்நாவலும் அப்படித்தான். முடித்ததும் என் முகத்தில் ஒரு புன்னகை இருந்தது. அதன்பிறகு ஒரு தூக்கம் போட்டேன். அப்போது வந்த கனவிலும் இன்பம் ஒரு மின்சாரமாகப் பாய்ந்து கொண்டிருந்தது. விழித்தபின்னரும் என்னால் அவரது எழுத்தின் அதிர்வை உணர முடிந்தது.

இந்நாவலில் மனதை மிகவும் வருத்த வைக்க வேண்டிய சில சம்பவங்கள் வருகின்றன. ஆனால் எழுத்தினுள் எங்குமே துயரம் இல்லை. இதைக் குறித்தே நான் தொடர்ந்து யோசித்துக் கொண்டிருந்தேன். அதெப்படி துயரத்தை துயரமின்றி எழுதுகிறார்? ஒரு கதாபாத்திரம் தம் விரலை மின்ரம்பத்தால் அறுக்கப் போவதாகச் சொல்லும்போதும், ஒரு குப்பையான சேரியில் ஒரு இயக்குநர் தங்கிக் கொண்டு பல சிரமங்களுக்கு ஆட்பட்டு பைத்தியம் பிடிக்கிற நிலைக்குப் போகும்போதும் அதில் ஒரு நகைச்சுவையை புக்காவஸ்கி கொண்டு வந்துவிடுகிறார். அவரது விட்டேத்தியான எழுத்து அணுகுமுறை இதைச் சாத்தியப்படுத்துகிறது. இது எனக்குக் கிடைத்த ஒரு முக்கியமான திறப்பு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

சினிமாவும் சர்வாதிகாரமும்: யோசா சொல்வதென்ன?

  காட்சி ஊடகம் நமக்குப் பொழுதுபோக்க உதவுகிறது என்றாலும் அது அடிப்படையில் மனிதரைச் சிந்திக்க விடாமல் செய்து செயலூக்கத்தை ஒழிக்கிறது, இது சர்வாதிகாரத்தை நோக்கி இட்டுச் செல்கிறது என்று சில மாதங்களுக்கு முன் நான் விஜய்யின் வருகையை ஒட்டி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். இன்று தற்செயலாக மரியோ பார்கஸ் யோசாவின் ஒரு கட்டுரையைப் படித்தால் அதில் அவர் கிட்டத்தட்ட அதே கருத்தைத்தான் சொல்கிறார். காட்சி ஊடகங்களின் ஆதிக்கம் உள்ள சமூகம் சர்வாதிகாரத்துக்கு எதிராகச் செயல்பட முடியாமல் முடங்கும் என்கிறார்: (...) making the present unreal, turning actual history into fiction has the effect of demobilising the citizen, making him or her feel exempt from any civic responsibility, encouraging the conviction that it is beyond anyone's reach to intervene in a history whose screenplay is already written. Along this path we may well slide into a world where there are no citizens, only spectators, a world where, although formal democracy may be preserved, we will be resigned to the kind of lethargy dictatorships asp...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...