முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

'யாருக்காக ஒலிக்கிறது இம்மணி முழக்கம்'

https://www.facebook.com/reel/1372212077667223

இதைத்தான் நான் ஏற்கனவே ஒரு பதிவில் சொன்னேன் - சாய் தீபக்கைப் போன்ற சங்கி அறிவுஜீவிகளே மோடி அரசை விமர்சிக்கிறார்கள் என்றால் அவர் மீது அழுத்தம் போடும்படியான முடிவை பாஜக உட்கட்சி போட்டியாளர்கள் எடுக்கிறார்கள் எனப் பொருள். மோடியை அவரது இந்துத்துவத்துக்காக ஆதரிக்கும் மக்கள் திரள் கல்வி அமைச்சகத்தின் நிர்வாகக் கோளாறையும் கரப்பான்களை அந்நிய சக்திகள் தூண்டி விடுவதான நியாயங்களையும் ஏற்க மாட்டார்கள் என்கிறார். அதாவது மோடியை நேரடியாகத் தாக்காமல் லேசாக ஒரு குத்து விடுகிறார். இந்த கரப்பான் பூச்சி போராட்டமே இதனால்தான் இவர்களால் மறைமுகமாக அனுமதிக்கப்படுகிறதோ எனும் ஐயம் வருகிறது. தன்னிச்சையாக இது நடந்து இவர்கள் அதைப் பயன்படுத்துவதானால் தில்லியில் ஜந்தர் மந்தரில் இத்தனை நாட்கள் போராடியிருக்க மாட்டார்கள். எதிர்பாராதவிதமாக சில விபத்துகள் நடந்து உயிரிழப்பு ஏற்பட்டு மக்கள் போராடி மோடிக்கு அவப்பெயர் ஏற்பட்டிருக்கும். இதுவே தெளிவாகத் திட்டமிட்டு கடந்த சில மாதங்களில் உயிர்ப்பெற்றிருக்கிறது. கரப்பான்களைப் போன்ற இளைஞர்கள் எனும் நீதிபதியின் சொல்லாடலைப் பயன்படுத்தி பகடி அமைப்பாக உருவானவர்கள் அப்போது கவனம் பெற்ற தேர்வுத்தாள் முறைகேட்டை எடுத்துக் கொள்கிறார்கள். அதாவது அந்த முறைகேட்டு விவகாரமும் குறிப்பான ஒரு கருத்தியல் பிரச்சினையோ நீண்ட காலமாக கரப்பான்களைப் பாதித்த பிரச்சினை அல்ல. அதை அவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள். அதற்குப் பதிலாக இளம்பெண்கள் பலாத்காரம் போன்ற ஒன்று கிடைத்திருந்தால் அதை எடுத்திருப்பார்கள். நேரடியாக மோடியைக் குற்றம் சாட்டக்கூடாது, அதேநேரம் அவர் மீது அழுத்தம் போட வேண்டும், நேரடியாக பாஜகவின் இந்துத்துவாவை, அடிப்படைக் கொள்கைகளைத் தாக்கலாகாது, ஆனால் நிர்வாகம் சார்ந்த ஒரு கோளாறை எடுத்துக் கொள்ளலாம் என்பதே அவர்களுக்கான கட்டளை என நினைக்கிறேன்.

இது ஒரு தன்னெழுசசிப் போராட்டமாக சில இடங்களில் நடந்தாலும் அபிஜீத் தீப்கேயின் கீழ் நடப்பன தெளிவாகத் திட்டமிட்ட வியூகத்தின் அடிப்படையிலான போராட்டமே. அவர் ஒரு அரசியல் ஹிட்மேன். இப்போராட்டம் முடிந்ததும் போய்விடுவார். அடுத்து அவரோ இன்னொருவரோ கொண்டு வரப்படுவார். அது வேறொரு பெயரில் புதிய பேனரின் கீழ் நடக்கும் என ஊகிக்கிறேன்.
பாஜக ஆதர்வாளர்கள் அல்லாதோருக்கு இதிலுள்ள ஒரே அக்கறை மோடி பலவீனப்பட்டால் அது பாஜகவை பலவீனப்படுத்துமா என்பது மட்டுமே. தொடர்ந்து இம்மாதிரி நிகழ்வுகளை நேரடியாகப் பொருள்படுத்தாமல் மறைமுக கதையாடல்களைக் கவனித்தால் பாஜகவுக்குள் என்ன நடக்கிறது என கணிக்க முடியும்.
இப்போராட்டங்களை ஓரளவுக்குக் கட்டுக்குள் கொண்டு வந்தபின்னர் மோடி தான் எப்படி மாணவர்களின நலனுக்காக கண்ணீர் விடுகிறேன், அவர்கள் நம் நாட்டின் கண்கள் என சில பல பேச்சுக்களைப் பேசுவார். சில வாரங்களில் பிரதானைப் பதவி விலக வைப்பார். அப்போது அது போராளிகளின் வெற்றியாக அல்லாமல் மோடியின் தூய ஆட்சியின், கறாரான அணுகுமுறையின் வெற்றியாக ஊடகங்களால் காட்டப்படும்.
உள்ளுக்குள் மோடியின் எதிரிகள் அடுத்தடுத்த கரப்பான்களை, சிலந்திகளை, பாம்புகளை தம் ஆய்வகத்தில் வளர்ந்த்துக்கொண்டு சரியான சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.