முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இரு மாணவ எழுத்தாளர்கள்

திவா ராஜேந்திரன் என்னுடைய நாவல் வகுப்பில் இருக்கும்போது ஒரு திருமண உறவில் பாலுறவு முரணால் ஏற்படும் சண்டை எப்படிப் பிரிவை நோக்கி இட்டுச் செல்கிறது என்பதே இந்நாவலின் ஒற்றை வரிக் கதை என்றார். நான் அவருடன் அனேகமாக தினமும் கதையமைப்பு பற்றி உரையாடுவேன் என நினைவு. எந்தப் பரிந்துரையைக் கொடுத்தாலும் அதை எடுத்துக் கொண்டு தன்னளவில் யோசித்து சில காட்சிகளை உருவாக்குவார். என்னிடம் சொல்லுவார். எழுதிக் காட்டுவார். குறிப்பாக மனைவி ஏன் அவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், கணவன் ஏன் போதுமான பாலியல் அறிவின்றி இருக்க வேண்டும் என்றெல்லாம் யோசித்து அதை கதைக்குள் அங்கங்கே பின்கதையாகவோ நினைவுகூரலாகவோ சேர்க்கக் கேட்டேன். நாயகன் தனது இளமையில் எம்மாதிரி அனுபவங்களைப் பெற்றார், அவரது உபமனத்தில் அதனால் எப்படியான சிக்கல்கள் தோன்றியிருக்க முடியும், அதை அவர் எப்படிப் பின்னர் தீர்க்கிறார் எனக் காட்ட வேண்டும் என்பதே என் விருப்பம். நான் அதை திவா மீது திணிக்கவில்லை. அவராகவே முடிவெடுத்து தன் நம்பிக்கையின்படி கதையை வளர்க்க வேண்டும் எனக் கருதினேன். அவர் தினமும் கிட்டத்தட்ட எழுதிவிடுவார். சில மாதங்களில் முடித்து சில திருத்தங்களையும் செய்தார். நல்ல உழைப்பாளி. என் வகுப்பில் மூன்று பேர்கள் முழுமையாக எழுதி முடித்தார்கள் என நினைவு. இருவர் பதிப்பித்தார்கள். குறைந்த காலத்தில் அதெல்லாம் பெரிய சாதனைதான். திவாவிடம் அவர் அடுத்தடுத்த நாவல்களை எழுத வேண்டும் எனச் சொல்லியிருக்கிறேன். ஏனென்றால் தொடர்ந்து எழுதி மட்டுமே நாவல் கலையை மேம்படுத்த முடியும்.

மற்றொரு மாணவரான மேரியை அண்மையில் திருவண்ணாமலை முகாமில் சந்தித்தேன். அவரும் தான் முடித்த நாவலை ஒரு பதிப்பகத்திடம் கொடுத்திருப்பதாகவும் இவ்வருடம் வெளியாகும் என்றும் சொன்னார். அவரிடமும் வகுப்பு நாட்களில் நிறைய விவாதித்தாக நினைவு. அவரது நாவல் காதல் கதையாகையால் பிரதான பெண் பாத்திரத்தின் வாழ்க்கைச் சவால்கள், தீர்மானங்கள், அவற்றை தர்க்கரீதியாக நியாயப்படுத்துவதைப் பற்றிப் பேசினோம். அவரது கதையே உணர்வுவயப்பட்ட நடையில் இளம் பெண்ணில் இருந்து இருபதுகளை அடையும் பெண்ணொருவரின் திருமண காலத்தின்போதான முதிர்ச்சியைக் காண்பிப்பது என்பதால் அதில் மனப்போராட்டங்களைச் சித்தரிப்பதே சவால் என்று சொன்னேன். திவாவுடையது பண்பாட்டுக் கூறுகள் கொண்ட உளவியல் எதார்த்தம் என்றால் இது அகப்போராட்டத்தை உறவுகளின் மாற்றங்கள் வழியாகச் சொல்லும் உணர்ச்சிகரமான ரொமான்ஸ். மேரிக்கு என் வாழ்த்துக்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...