ஒரு நாவலையோ நீண்ட கதைகளையோ ஒரு மன எழுச்சியில் பரபரப்பாக எழுதி முடிக்கலாம். எழுதத் தொடங்கி எங்கோ திசையைத் தொலைத்து விடலாம். அதேநேரம் இந்த உணர்வெழுச்சியானது ஒரு கவித்துவமான வரைபடத்தின் மீதே தோன்றி நம்மை நடத்துகிறது. இந்த வரைபடத்தை ஒரு குறியீடு அல்லது உருவகம் என்று புரிந்துகொள்ளலாம். இதுதான் கதையமைப்பு என்றும் சொல்லப்படுகிறது.
கதையமைப்பு உள்ளிருந்து தோன்றாதபோது நம்மால் வெளியில் இருந்தும் உருவாக்க முடியும். இப்போது நாம் உருவாக்கியுள்ள கதையமைப்பு நம்மைத் தூண்டி ஆவேசப்பட வைக்கும். அதுவே நம் எழுத்தைச் செலுத்தும்.
இந்த நுட்பமானது ஒரு பார்முலாவை வைத்து எழுதுவது எப்படி என்பது அல்ல. மாறாக கதையைக் குறித்துச் சிந்தித்து அதைக் கொண்டு நமக்குள் இயங்கும் ஒரு ஆதாரமான உணர்வைக் கிளர்த்துவது, ஒரு சிந்தனையை வெளியே தோண்டி எடுப்பது.
இதனாலே கதையமைப்பைத் திட்டமிடுவது ஒரு அடிப்படையான புனைவுப் பயிற்சி என பல படைப்பாளிகள் நினைக்கிறார்கள். இதையே வரும் ஞாயிற்றுக் கிழமை நான் பயிலரங்கில் சொல்லித் தர இருக்கிறேன். விருப்பமுள்ளோர் ஒரு சிறு கட்டணத்தைச் செலுத்தி விபரங்களை கூகிள் படிவத்தில் சேர்த்து விட்டுக் கலந்து கொள்ளுங்கள். சந்திப்போம்.
கருத்துகள்