முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பேஸ்புக் ஏன் உங்களுக்கு வருமானம் தருவதில்லை?


வனிதா விஜயகுமார் அண்மையில் தான் யுடியூப் சேனல் ஆரம்பித்தார். அவரது ஆரம்ப கட்ட பிரபல்யம், அடாவடிப் பேச்சு, துணிச்சல், சுயபிரஸ்தாபம், சுவாரஸ்யமான மேக் அப் காணொளிகள், தொடர்ந்து பார்க்க வைக்கும் அதே நேரம் ரொம்ப சொதப்பலான, அசுத்தமான சமையல் குறிப்பு காணொளிகள் (ஒருமுறை அவர் செய்த நெய்ச்சோறு குழைந்து விட்டது, பிட்ஸா பாதி வேகாமல் வந்தது - ஆனாலும் எனக்கு வலிக்கலியே என்பதைப் போல அதை தானும் சாப்பிட்டு தன் குழந்தைகளையும் சாப்பிட வைத்து ரொம்ப நல்லா இருக்கில்ல என சொல்ல வைத்தார்.) என பதிவேற்று நிறைய ரசிகர்களைப் பெற்றார். அடுத்து தன் திருமணத்தை நேரலையாகக் காட்டி, அதில் பீட்டர் பாலை உதட்டோடு முத்தம் பதித்து, அதன் பிறகு இதைக் கண்டு பீட்டர் பாலின் மனைவி கண்டிக்க, அதை வனிதா கண்டிக்க, நடுவே லஷ்மி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, அடிக்கொரு தரம் துப்புகிற சூர்யா தேவி என ஆளாளுக்கு நடுவே புகுந்து அடிதடி கலவரம் பண்ண கடந்த சில வாரங்களாக மொத்த தமிழகமே வனிதாவைப் பற்றித்தான் பேசுகிறது. இதில்யாரும்மா நீ வனிதா?” என யுடியூபே கேட்கும் அளவுக்கு அவரது யுடியூப் புகழ் கூரையைப் பிய்த்துக் கொண்டு சென்று விட்டது. அவரது ஒரு காணொளிக்கு சராசரியாக ஐந்து லட்சம் பார்வைகள் கிடைக்கின்றன. அவர் சராசரியாக ஒரு மாதம் யுடியூபில் இருந்து 8 லட்சத்தில் இருந்து 25 லட்சம் சம்பாதிக்கிறார் என ஒரு செய்தி பார்த்தேன். வனிதா தன் வாழ்வில் ஒரு படத்துக்கான கால்ஷீட்டில் கூட இதில் பாதி சம்பாதித்திருக்க மாட்டார். யுடியூப் அப்படி வனிதாவுக்கு மட்டுமல்ல வேறு பல சாமான்ய பிரபலங்களுக்கும் பொன் முட்டையிடும் வாத்து ஆகி விட்டது. அன்னம்மா சேட்டத்தி என கேரளாவில் ஒரு கிழவி இருக்கிறார். அவருக்கு உள்ளூர் உணவுகள் மட்டுமே பண்ணத் தெரியும். குழறிக் குழறி அவர் பேசுவது பாதி பேருக்குப் புரியாது. அவருடன் சமைக்கும் மகன் தான் அவரது மலையாளத்தை மலையாளத்துக்கு மொழிபெயர்ப்பார். ஆனால் பாருங்கள் அவரை இன்றைய தலைமுறைக்கு பிடித்துப் போய் விட்டது. இந்த கடைசி காலத்தில் மாதம் பல லட்சம் சம்பாதிக்கும் வி..பி ஆகி விட்டார். இதே போலத்தான் village food factory டேடி ஆறுமுகத்துக்கும் லக்கடித்தது. அவரது மகனின் இயக்குநர்  ஷங்கர் பாணியில் பிரம்மாண்டமாக பொதுவெளியில் சமைக்கிற ஸ்டைல் மக்களின் கவனத்தைக் கவர்ந்தது, அதோடு பார்வையாளர்களுக்கு தாத்தாவின் வெகுளியான பேச்சும் எளிமையும் ரசிக்கும்படியாக இருந்தது. ரொம்ப கஷ்டப்பட்டு போராடி வாழ்ந்த டேடி ஆறுமுகம் இப்போது ரொம்ப ஈஸியாக லட்சங்களில் கொழிக்கிறார். எங்கள் ஊரை சேர்ந்த ஸ்டெபி அக்காவைப் பற்றி சொல்லவே வேண்டாம். யுடியூப் சமையல் வீடியோ உலகில் அவர் ஒரு சூப்பர் ஸ்டார். அவர் இந்தியாவில் இருந்திருந்தால் யுடியூபில் வரும் பணத்தில் பல பங்களாக்கள் வாங்கி இருக்கலாம்


யுடியூபில் சில மணிநேரம் செலவிட்டு உழைக்கிறவர்களுக்கு அதுவே வருமானம் தரும் தொழிலாகிறது என்றால் அநேகமாய் 20 மணிநேரம் இங்கேயே பேஸ்புக்கில் குப்பை கொட்டுகிறவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் சாதாரணமாய் ஒவ்வொரு பதிவுக்கும் சராசரியாய் 10,000 விருப்பக்குறிகள் பெறுகிறவர்கள் உண்டு. எனில் அவர்களுக்கான views என்பது நிச்சயம் 50,000 இருக்கும். முன்பு அம்புஜா சிமி எனும் பேக் ஐடி ஒவ்வொரு படத்துக்கும் எளிதாய் ஒரு லட்சம் விருப்பக்குறிகள் பெற்றுக்கொண்டிருந்தார். எனில் views எவ்வளவு இருக்கும்? இவர்களை வைத்து தான் பேஸ்புக்கில் விளம்பரம், அதில் இருந்து வருமானம் எல்லாம் கல்லா கட்டுகிறது. ஆனால் பேஸ்புக் இதுவரை நயா பைசா யாருக்கும் தந்ததில்லை. இந்த பேஸ்புக் பிரபலங்கள் இந்த உழைப்பை யுடியூபில் காட்டி இருந்தால் இந்நேரம் சொகுசாக வாழ்ந்திருக்கலாம். ஆனால் பேஸ்புக் அவர்களை அதை விட சுகமான பேர், கவனம், சமூகத்தின் பகுதியாக இருக்கிற கிளர்ச்சியை தருகிறதே, தோழிகளை, தோழர்களைப் பெற, அதைக் கொண்டு வேறு லௌகீக பயன்களைப் பெற உதவுகிறதே. நீங்கள் தினமும் சில மணிநேரம் மட்டுமே யுடியூப் பார்க்க முடியும், ஆனால் பேஸ்புக்கிலோ 18 மணிநேரம் இருந்தாலும் அலுக்காது. ஆக பேஸ்புக்கில் இருப்பதே அதற்கான உளவியல் பிரதிபலனை, லாபத்தைத் தருகிறது என ஸூக்கர்பர்க் நினைத்திருக்கலாம். உங்களுக்கு எல்லாம் இனி காசு வேற தரணுமா என்பது அவரது அணுகுமுறை. நம்மாட்களும் கரும்பு தின்னக் கூலியா என இளித்துக் கொண்டு இருந்து விட்டார்கள்.


 ஆனால் யுடியூப் ஏற்படுத்தும் தாக்கம் பலரையும் இனி பேஸ்புக்கில் இருந்து யுடியூபை நோக்கி நடை கட்ட செய்யும். இதை உணர்ந்துள்ள பேஸ்புக் இனி காணொளிப் பதிவுகளுக்கு விளம்பர வருமானம் ஏற்படுத்தித் தர திட்டமிடுவதாக சொல்கிறார்கள். இந்த திட்டம் வெற்றி பெறுமானால், என்ன நடக்கும்

பேஸ்புக்கில் எழுதுவதை வெகுவாகக் குறைத்து காணொளிகள் போடத் தொடங்குவோம். அதில் சரியான உடல்மொழி, தோற்ற மெருகு, திறன் கொண்டவர்கள் நட்சத்திரங்கள் ஆவார்கள். அவர்களுக்கு லட்சங்களில் சம்பாதிப்பார்கள். விருப்பக்குறிகளுக்காக பதிவுகள் எழுதுவோர், அதைக்கொண்டு மார்தட்டுவோர் காணொளி நட்சத்திரங்களை நோக்கி வயிற்றெரிச்சல்பட்டு எழுத்துக்கு விடை கொடுப்பார்கள். பிளாகுக்கு நடந்தது, இதற்கும் நடக்கும். பேஸ்புக் சிறுபத்திரிகைகள், வணிக பத்திரிகைகளின் இடத்தை எடுத்துக் கொண்டது ஒரு முடிவுக்கு வரும். எழுத்தை சீரியஸாக எடுப்பவர்கள் மட்டும் பதிவர்களாக நிலைப்பார்கள்.

இப்படி சில நன்மைகளும், தீமைகளும் ஏற்படும்.  

கருத்துகள்

Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
புளு சட்டையோட வருமானம் எல்லாவற்றயும் விட பெரிது

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...