முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜனநாயக விழுமியங்களை ஒரு பொருட்டாக மதிக்காத இந்துத்துவா



//"சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை இல்லாமலே ஒரு திட்டத்தைத் தொடங்கவும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டத்தை விரிவாக்கம் செய்யவும் இந்த வரைவு வழி வகை செய்கிறது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கையின்றி தொடங்கப்படும் அல்லது விரிவாக்கம் செய்யப்படும் இந்த திட்டங்கள் குறித்து பிறகு ஒரு குழு போடப்பட்டு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்ட பின்பு யார் அதனை முடக்குவார்கள். எளிமையாகக் கேட்கிறேன் ஒரு ஸ்டெர்லைட் ஆலையை மூட வைக்க எத்தனை பேர் உயிர் துறக்க வேண்டி இருந்தது," என்று கேள்வி எழுப்புகிறார் சுந்தராஜன்.

"குறிப்பாக இன்னொரு விஷயத்தைக் கூற வேண்டுமானால், சூழலுக்கு ஊறு விளைவிக்கும் தொழிற்சாலைகளை எதிர்த்து சில அமைப்புகள் நீதிமன்றங்களுக்குச் செல்கின்றன அல்லவா. அதனைத் தடை செய்கிறது இந்த வரைவு. ஒரு நிறுவனத்தை எதிர்த்து குடிமை சமூகமோ, தனி நபர்களோ இனி நீதிமன்றங்களுக்குச் செல்ல முடியாது. அரசு அமைப்புகள் மட்டுமே செல்ல முடியும் என்கிறது இந்த வரைவு. இது மோசமான ஆபத்தாக முடியும்," என்கிறார் அவர்.

சூழலியல் தாக்க மதிப்பீடு 2020 வரைவு அறிக்கையைக் கடுமையாக எதிர்க்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ். "இந்த அறிவிக்கை சுற்றுச் சூழல் விதிகளே ஒரு தேவையற்ற சுமை என்று இந்த அரசு நினைப்பதை வெளிப்படுத்துகிறது. பின் தேதியிட்டு திட்டங்களுக்கு அனுமதியளிப்பது என்பது மக்களின் சுகாதாரம் மற்றும் நலனில் அக்கறையற்ற செயல்" என விமர்சித்துள்ளார்.

இது நில ஆக்கிரமிப்புக்குத்தான் வழிவகை செய்யும் என அவர் கூறி இருக்கிறார்.//

மேலும் படிக்க: 

நண்பர்களே,
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை - இந்த இந்துத்துவ அரசுக்கு சட்டதிட்டங்களில், பொதுமக்களின் விருப்பம், அக்கறைகள், ஜனநாயக விழுமியங்களில் எந்த நம்பிக்கையும் இல்லை என்பதை இந்த புதிய சட்ட வரைவு மீண்டும் காட்டுகிறது. 
இவர்கள் ஒரு சின்ன பிரச்சனைக்காக காந்தியைக் கொன்றது, அதன் பின்னர் வரலாற்று ஆதாரம் இன்றியே அயோத்தியில் மசூதியை இடித்தது, அதன் பின்னர் பணமதிப்பிழப்பு, குடியுரிமை திருத்தச் சட்டம், இப்போது இந்த சூழலியல் தாக்க மதிப்பீடு மற்றும் வர்ணாசிரம் அடிப்படையில் வேலை வழங்கும் திட்டம் (உ.பி) என ஒவ்வொன்றிலும் எந்த தர்க்கத்தையும் மக்கள் நலன் குறித்த திட்டத்தையும் பார்க்க முடியாது. பொதுமக்களையும் சிந்தனையாளர்களையும்  அறிவிலிகளாக பாவிப்பது, ஆர்.எஸ்.எஸின் அதிகார உச்சிக்கிளையில் வாலாட்டி அமர்ந்திருக்கும் பார்ப்பனிய தலைமையின் மக்கள் விரோத திட்டங்களை எந்த கலந்தாலோசனையும் இன்றி நடைமுறைப்படுத்துவது என இந்துத்துவா ஒரு கடைந்தெடுத்த பார்பனியம் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார்கள். இறுதியாக, இவர்களை இன்னும் 20 வருடங்கள் ஆளவிட்டால் அரசியலமைப்பு சட்டத்தை ஆர்.எஸ்.எஸ்ஸின் பிராமணிய சட்டமாக மாற்றியமைப்பார்கள்.
நீங்கள் எதிர்த்தால், போராடினால் சில மாதங்கள் பொறுத்து மீண்டும் அதே சட்டங்களை நீங்கள் எதிர்பாராத போது கொண்டு வருவார்கள். காரணம் நான் மேலே சொல்லியிருப்பது தான்.
பேசாமல் அண்ணாவின் காலத்திலேயே நாம் தனிநாடு பெற்று வந்திருக்கலாம்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.