முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

போராட்ட விடுமுறை

 May be an image of text


"போராட்டத்தில் இருந்து அடுத்த இரு வாரங்கள் விடுமுறை எடுப்போம். தீபாவளி கொண்டாடுவோம். குடும்பத்துடன் நேரம் செலவழிப்போம்." என அபிஜீத் தீப்கே பேசிய காணொளியைப் பார்த்தேன். அவரைப் பாராட்டத் தோன்றியது. ஏனென்றால் போராட்டம் செய்ய உற்சாகமான தொண்டர்களும் தன்னார்வலர்களும் தேவை. அரசுக்கு எதிரான போராட்டம் ஒரு யுத்தத்திற்கு சமானமானது. கடந்த முறை கரப்பான்களுக்கு சற்று சுலபமான முறையில் பாஜக அரசின் நடத்தை இருந்தது. பெரிதாகக் கைதில்லை, தடையில்லை. ஆனால் இம்முறை அடி பலமாக இருந்தது. எல்லா பாதைகளையும் முடக்கியதுடன் அவர்களுடைய தலைவர்கள் மீதும் பல வழக்குகளைப் போட்டுவிட்டார்கள். ஆகையால் தோல்வியை ஒப்புக்கொண்டு பதுங்கிவிட்டு திரும்ப வருவோம் என்கிறார். இது ஒரு பாராட்டத்தக்க அணுகுமுறை. நீங்கள் பழங்காலத்தில் மன்னர்கள் படையெடுத்துப் போரிடும்போது காட்டிய பொறுமையைப் பார்த்தால் வியப்பாக இருக்கும். பல ஆண்டுகள் திரும்பத் திரும்ப வந்து தாக்கிக் கொண்டு இருப்பார்கள். அடி பலமாக விழுந்தால் பின்வாங்குவார்கள். இம்முறை கரப்பான்கள் மிகவும் நொடிந்து விட்டிருக்கிறார்கள். ஆகையால் இனிமேலும் அவர்களை நெருக்க முடியாது என அறிந்து தீப்கே பின்வாங்கிட ஆணையிடுகிறார்.
சரியாகப் பின்வாங்கி மீண்டும் பலமாக வருவோரே தாக்குப்பிடித்து வெல்வார்கள். இம்முறை க்யானேஷ் தப்பித்துவிட்டார். வாழ்த்துக்கள் ப்ரோ.
ராகுல் காந்தியும் விடுமுறைக்குப் போயிருப்பதாகக் கேள்விப்பட்டேன். அவர் ஒரு தொழில்முறை அரசியல்வாதி எனும் கணக்கில் ஒரு விடுமுறை அவசியம்தான்.
இரண்டு கட்சிகளிடம் என்னுடைய வேண்டுகோள்: பிரேக்கிற்குப் பின் நல்ல செயல் திட்டத்துடன் வாருங்கள். சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கத் தயாராக வாருங்கள். இல்லாவிட்டால் க்யானேஷையும் அவரது முதலாளிகளையும் நெருங்க முடியாது. கோட்டை பலமானது. கோட்டையைப் பாதுகாக்கும் படைவீரர்கள் கொடூரமானவர்கள். அவர்கள் அஞ்சுவது மக்களின் கோபத்துக்கு மட்டுமே. மக்களைக் கோபப்படுத்த அவர்களுக்காக அவர்களை விட மோசமாக யாராவது துன்பப்படுவதை அவர்கள் பார்க்க வேண்டும். அவர்கள் கண்முன்னே ஒருவர் உயிரிழக்கும் நிலை வரை போக வேண்டும். உண்ணாநிலைப் போராட்டத்தால் யாரும் சாக மாட்டார்கள் என பொதுஜனத்துக்குத் தெரியாது. நானெல்லாம் இரு வாரங்கள் இருந்திருக்கிறேன். பயிற்சியிருந்தால் 3-4 மாதங்கள் வரை கூட இருக்கலாம்.
போய் வாருங்கள். அதுவரை எங்களுக்கும் நிறைய வேலை கிடக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Counterarts இதழில் வெளிவந்துள்ள என் கட்டுரை

"There has always been a permanent child within Kafka. Society functions as an extension of the office and the family, constantly monitoring and evaluating people and subjecting them to the examination of its rules. In other words, even when Kafka leaves home to go to work, and even afterwards, he remains within the family. Within the family, he is always a son or a brother. The family preserves itself through continuous self-surveillance and mutual surveillance. The same thing happens outside it." https://medium.com/counterarts/kafkas-diaries-735b74cd0c44

இன்று அவளது ஐம்பதாவது திருமண நாளாக இருக்க வேண்டும் (ஆன் கார்ஸன் கவிதைகள் 3)

  ரொமானிய சுவரை நோக்கி உரையாற்றுகிறது குளிர் - ஆன் கார்ஸன் - தமிழில் ஆர். அபிலாஷ் ஒளி மட்டற்று ( சிறைப்படுத்தப்பட்டது ) மேலும் , நிழல்கள் விழக் காத்திருக்கின்றன தலைமறைப்புகளைப் போல . மூளை தட்டுகிறது இருமுறைகள் உப்புக்காக .   WOULD BE HER 50TH WEDDING ANNIVERSARY TODAY Cold orates upon a Roman wall. Light is extreme (caught) and shadows wait like hoods to drop. Brain taps twice for salt. Was it Ovid who said, There is so much wind here stones go blank. (Excerpt From Decreation, Anne Carson) வாசகக் குறிப்பு : இதுவும் ஒரு கீறல் ஓவியம் போன்ற கவிதைதான் . விளக்கக் குறிப்புகளோ விவரணைகளோ இல்லை . கதையாடல் கவிதையென்றாலும் யார் , என்ன , எப்படி , ஏன் ஆகிய தகவல்களை நாமே அனுமானிக்க வேண்டும் . இப்போது ஒவ்வொரு சொல்லும் ஒரு உருவகமாகிறது ( ஏனெனில் தலைப்பில் உள்ள திருமண பந்தம் குறித்த விபரம் இதைக் குறியீடாக்காமல் தடுக்கிறது ). ஐம்பதாவது திருமண நாளெனில் அவருக்கு வயது 70 இருக்குமா ? அவர் ரொமானிய வரலாற்றுச் சின்னங்களைக் காண வந்...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.