முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கரப்பான் பூச்சிகள் அடுத்தென்ன செய்ய வேண்டும்?

 CJP Protest Challenges Modi's Strongman Image - Frontline

கரப்பான் பூச்சிப் போராட்டங்கள் இரு கூறுகளாகப் பிரிந்திருக்கின்றன. ஒரு பக்கம் காங்கிரஸுடன் லெனினிய கம்யூனிஸ்ட் மாணவர் அமைப்பின் நேஹா போரா; இன்னொரு பக்கம் ஆம் ஆத்மி பின்னணி கொண்ட தீப்கே, ரங்கா போன்றோர். ராகுல் காந்தி ஆம் ஆத்மி பின்னணி கொண்ட கரப்பான் பூச்சித் தலைவர்களை பாஜகவுக்கு எதிர்க்கட்சியாக, காங்கிரஸுக்குப் பதிலியாக முன்வைக்க சில சக்திகள் முயல்வதாகச் சந்தேகப்படுகிறார் (தமிழ்நாட்டில் திமுக இரு தரப்பு கரப்பான்களையும் ஆதரிக்கிறது, ராகுலுக்குச் சார்பாகப் பேசாமல் இருக்கிறது). இப்போது போராட்டம் யார் மூன்றாவது அணி என்பதில்தான்.
இன்னொரு பக்கம், கடந்த முறை விமர்சகர்கள் கேட்ட கேள்விக்கு ஓரளவுக்கு விடை கிடைத்துவிட்டது - முதல் நிலைப் போராட்டத்தின்போது பாஜக அரசு எப்படி தீப்கே, நேஹா போரா உள்ளிட்டோரை ஜந்தர் மந்தரில் தொடர்ச்சியாகப் போராட அனுமதித்தது? அப்போது பாஜகவுக்கு இப்போராட்டங்களைத் தமக்குச் சாதமாகப் பயன்படுத்திக் கட்டுப்படுத்தலாம் என ஒரு உத்தேசம் இருந்திருக்க வேண்டும். அவர்கள் கரப்பான் பூச்சிகளைக் குறைத்து மதிப்பிட்டிருக்க வாய்ப்பு மிக மிகக் குறைவே. ஆனால் வடமாநில கல்லூரிகளின் மாணவர் அமைப்பினர் தில்லியில் மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டு வெகுண்டெழுந்ததை, இந்திய மத்திய வர்க்கம் அதை ஆதரித்ததை பாஜக தலைமை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இம்முறை போராட்டம் ஆரம்பிக்கும் முன்பே போராட்டக் களங்கள், போராட்டக்காரர்கள் வரும் மார்க்கங்களை எல்லாவற்றையும் அடைத்ததுடன் துவக்கத்திலேயே கரப்பான் பூச்சிகளைக் கொத்துக் கொத்தாகக் கைதும் பண்ணினார்கள். இன்னும் ஒரு படி மேலே சென்று அப்பாவிகள், ஊடகக்காரர்கள், எம்.பிக்கள் எல்லாரையும் பிடித்துப் போய் தாக்கவும் செய்தார்கள். தில்லி போலிசார் எவ்வளவு மரமண்டையர் எனில் அவர்களுக்கு எம்.பிக்களின் முகம் கூடத் தெரியவில்லை எனப் பாருங்கள். டிவியில் செய்தி கூடப் பார்ப்பதில்லை போல. சாப்பிடுவது, தூங்குவது, வேலைக்கு வருவதைத் தவிர துண்டுக் காகிதம் கூட வாசிக்காத ஒருவித விலங்குகள். எது எப்படியோ பாஜக தலைமை வெற்றிகரமாக போராட்டங்களை ஒடுக்கிவிட்டார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. அடுத்ததாக, அரசைக் கவிழ்க்க முயற்சி என அவர்களுடைய இரண்டாம் மட்ட தலைவர்கள் ஊடகங்களில் ஒப்பாரி வைக்கத் தொடங்கிவிட்டார்கள். அப்படியே இந்திரா காந்தி 1970களில் செய்ததை எல்லாம் போலச் செய்கிறார்கள்.
தீப்கேயும் நேஹாவும் அடுத்து செய்ய வேண்டியது உண்ணாநிலைப் போராட்டம் இருப்பது. இந்தியா முழுக்க மாணவர்களை கிடைத்த இடங்களில் எல்லாம் உண்ணாநிலைப் போராட்டம் செய்யச் சொல்வது. கைது பண்ணுவார்கள். சிறையிலும் விரதத்தைத் தொடர வேண்டும். காங்கிரஸ் சார்பில் யாராவது ஒரு வயதான தலைவரை உண்ணாநிலைப் போராட்டம் செய்யக் கேட்க வேண்டும்.
இது மட்டுமே அரசை நெருக்கடியில் தள்ள முடியும். இல்லாவிட்டால் கரப்பான் பூச்சிகளின் இரண்டாம் கட்டப் போராடங்கள் பிசுபிசுத்துவிடும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Counterarts இதழில் வெளிவந்துள்ள என் கட்டுரை

"There has always been a permanent child within Kafka. Society functions as an extension of the office and the family, constantly monitoring and evaluating people and subjecting them to the examination of its rules. In other words, even when Kafka leaves home to go to work, and even afterwards, he remains within the family. Within the family, he is always a son or a brother. The family preserves itself through continuous self-surveillance and mutual surveillance. The same thing happens outside it." https://medium.com/counterarts/kafkas-diaries-735b74cd0c44

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...