ஜெபின் லிஜோவும் நானும் இணைந்து எழுதிய கட்டுரையொன்று Peace Review எனும் ஆய்விதழில் வெளியாகியுள்ளது. பெரியாரிய, அம்பேத்கரிய சிந்தனைகள் எதிரெதிராக வைக்கப்படும் சூழலில் இங்குள்ள சாதிய வெறுப்பை, தலித்துகள் மீதான ஒடுக்குமுறைகளை, சமூகப்பிளவை எப்படிச் சரிசெய்வது என இக்கட்டுரையில் விவாதித்துள்ளோம். கிறைஸ்டில் ஜெபின் என் முனைவர் பட்ட ஆய்வு மாணவராக இருந்தார். அவரது ஆய்வை ஒட்டி நாங்கள் இந்த சமூகச் சிக்கல்களைக் குறித்து நிறைய விவாதித்தோம். அந்த விவாதங்களின் ஒரு பகுதியாக இக்கட்டுரை கிளைத்துள்ளது.
கட்டுரையின் தொடுவழி: https://www.tandfonline.com/doi/full/10.1080/10402659.2025.2581872?src=ஜெபினுக்கு என் நன்றி.
பின்குறிப்பு 1: இது இப்போதைக்கு "சந்தா இல்லாதாரும் வாசிக்கும்" இதழ் அல்ல (அதாவது closed access journal). ஆனாலும் அதன் சுருக்கத்தைப் படிக்கலாம் என்பதற்காகப் பகிர்ந்துள்ளேன்.
பின்குறிப்பு 2: நான் முன்பு காப்பி எடிட்டிங் எனப்படும் ஆய்வுக்கட்டுரை திருத்தும் பணியில் இருந்தபோது Taylor and Francis பதிப்பகத்தின் கட்டுரைகளைத் தொடர்ந்து திருத்திக் கொண்டிருந்தேன் (அவர்கள் எங்கள் நிறுவனத்தின் முக்கியமான பயனராக இருந்தார்கள்.) இப்போது அந்த பதிப்பக இதழிலேயே என் கட்டுரை வந்துள்ளதில் ஒரு கிளுகிளுப்பு.
பின்குறிப்பு: இந்த ஆண்டு வெளியாகியுள்ள என் இரண்டாவது ஆய்வுக்கட்டுரை இது. ]