முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாவலாசிரியரின் குறிப்புகள் 16

 


நேற்று இரவு ஒரு அரசியல் நேர்முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆளுங்கட்சியின் ஆலோசகரும் அமைச்சருமான ஒருவரைக் குறிப்பிட்டு அவர் ஒரு குட்டிச்சாத்தான், அவருக்கு தொடர்ந்து வேலை கொடுக்கவில்லை என்றால் அவர் உங்களை முழுங்கிவிடுவார் என்று சொன்னார். எனக்கு அந்த உருவகம் ரொம்ப உயிர்ப்பாக, வித்தியாசமாகத் தோன்றியது. நான் எழுதிக் கொண்டிருக்கும் நாவலில் வரும் ஒரு குறிப்பிட்ட பாத்திரத்துக்கு அந்த குட்டிச்சாத்தனின் இயல்பு ஒரு புதிய பரிமாணத்தைக் கொடுக்கலாம், கதையமைப்பையும் அது வலுவாக்கும் எனத் தோன்றியது.

உடனே இரவுணவை முடித்துவிட்டு அதை எழுத வேண்டும் எனத் தீர்மானித்தேன். கொஞ்ச நேரம் வேறென்னென்னமோ செய்திருந்துவிட்டு சட்டென நாவலைத் திறந்து எழுத ஆரம்பித்ததும் கடும் புயல் மழையில் வீட்டின் சுவர்களைப் பெயர்த்துக் கொண்டு வெள்ளம் பாய்வதைப் போல சொற்கள் பெருக்கெடுத்து ஓடின. விடியும்போதுதான் எழுதுவதை நிறுத்தினேன். எழுதும்போதே அது நன்றாக வந்துள்ளதாக உணர்ந்தேன். ஒரு அரசியல் நேர்முகத்தில் இருந்து என் நாவலுக்கு ஒரு திறப்பு வருமென யாராவது சொல்லியிருந்தால் கட்டாயம் நம்பியிருக்க மாட்டேன். ஆனால் நாம் எதைச் செய்தாலும், படித்தாலும், பார்த்தாலும், கேட்டாலும், நுகர்ந்தாலும், ஸ்பரிசித்தாலும் மனம் நாவலையே ஒருபுறம் சிந்தித்துக் கொண்டிருக்கிறது. நாம் நாவலை எழுதாத போதும் அதை நம் ஆழ்மனத்தில் எழுதிக் கொண்டே இருக்கிறோம். அதனாலே எனக்குச் சில நேரங்களில் ஒரு படைப்பாளி எதையும் எழுதாமல், செய்யாமல் நேரத்தை வீணடிப்பது, வெட்டியாய் பொழுதைக் கழிப்பது நல்லது என்று தோன்றும். அப்போது அவர் தன் மனத்தை மட்டும் தீவிரமாக, ஒரு கொதி நிலையில் வைத்திருக்க வேண்டும். ஒரு நாள் முடியும்போது அவர் ஒன்றையும் எழுதாவிட்டாலும் மிகவும் களைப்பாக உணர்வார். அவரது படைப்பு மனம் அவர் எழுதாத போழுதை விட அப்போது மிகத்தீவிரமாகச் செயல்பட்டிருக்கிறது என்பதை அவர் அறிய மட்டார். அவர் அறியாதபோது மட்டுமே அது நிகழும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...