இன்றைய உலகக்கோப்பை ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவின் எதிர்மறை ஆட்டத்தை பார்க்கையில் இது விட்டுக்கொடுக்கப்பட்ட ஆட்டமோ எனத் தோன்றுகிறது. குறிப்பாக, இங்கிலாந்தின் துவக்க பேட்ஸ்மேன் ஜேசன் ராய் இருபது சொச்சம் ஸ்கோரில் இருக்கும் போது கீப்பருக்கு எட்ஜ் கொடுக்க அதை ரிவ்யூ பண்ண வாய்ப்பிருந்தும் கோலி எடுக்கவில்லை
அந்த அப்பீலுக்குப் பின் தான் அவுட் என்றாலும் நடுவரும் எதிரணித் தலைவரும் தன்னை வெளியேற்ற விரும்பவில்லை என்பதை உணர்ந்து கொண்ட பின்னர் தான் தான், ஜேசன் ராய் சிக்ஸர்களாக விளாசவும் ஆட்டத்தை இந்தியாவிடம் இருந்து முழுக்க பறித்துச் செல்லவும் துவங்கினார். இவ்வளவு முக்கியமான ஒரு முடிவை கோலி ஏன் ஆர்வமே இன்றி எதிரணிக்கு சாதகமாக தாரை வார்த்தார்? எட்ஜ் ஆன ஒலியை தோனி தெளிவாக கேட்டு அப்பீல் பண்ணின பின்னரும் கோலி ஏன் அது அவுட்டே இல்லை என கோலி அனைவரையும் நம்ப வைக்க முயன்றார்? இத்தனைக்கும் கோலி பவுலர் மற்றும் கீப்பரை விட தொலைவில் இருந்தார்? எட்ஜ் ஆனதையோ அந்த சன்னமான ஒலியையோ அவர் பார்த்திருக்க, கேட்டிருக்க சாத்தியமில்லை. இருந்தும் ஏன் அவர் அவ்வளவு ஆணித்தரமாய் வாதிட்டார்?
இதன் பிறகு ஐம்பது ஓவர்களும் அவர் ஒரு ரிவ்யூ கூட எடுக்கவில்லை. வழக்கமாய் கோலி இதற்கு நேர்மாறானவர் என்பது நாம் அறிந்தது. இன்னொரு பக்கம் இங்கிலாந்தும் இந்த கொடைக்கு நன்றி சொல்வது போல இந்திய பேட்ஸ்மேன் ஹர்த்திக் பாண்டியாவின் ஒரு டைட்டான LBWவை ரெவ்யூ பண்ணவில்லை. ஒட்டுமொத்தமாய், 100 ஓவர்களும் இரண்டு அணிகளும் ஒருமுறை கூட ரெவ்யூ பண்ணவில்லை. பொதுவாக ரெவ்யூ என்பது ஒரு அணியின் வெற்றி ஆவேசத்தை பிரதிபலிப்பது. ரெய்வூயை இரு அணிகளும் தொடவே இல்லை என்பது இது ஒரு fixed ஆட்டம் என்பதை காட்டுகிறதா?

இங்கிலாந்து மட்டையாளர்கள் குல்தீப் மற்றும் சாஹலை சுலபமாக சிக்ஸர்கள் விளாசும் போதும் பும்ரா அல்லது ஷாமியை கொண்டு வந்து விக்கெட் எடுக்க கோலி சற்றும் முயலவில்லை. மாறாக அவர் சுழலர்களையே தொடர்ந்து வீச வைத்தார். ஸ்டோக்ஸ் மட்டையாட வந்த போது கூட அவர் ஜாதவை வீச வைத்து விக்கெட் எடுக்கவோ அல்லது தன் சாஹலை 40 ஓவருக்கு பிறகு வீச வைக்காமல் இருக்கவோ முயன்றிருக்கலாம். ஆனால் ஒவ்வொரு முறை வேகவீச்சாளர்கள் ரன்களை குறைக்கும் போது கோலி கால்சுழலர்களை ஸ்டோக்ஸுக்கு விருந்தாக படைத்துக் கொண்டிருந்தார்.
பேட்டிங்கிலும் இந்தியா ஓரளவுக்கு போராடியது. ஆனால் நாற்பதாவது ஓவர் கடந்த நிலையில் ஹர்த்திக் வெளியேறிய பின் தோனியும் ஜாதவும் ஆடிய விதம் மிகவும் அவமானகரமாய் இருந்தது. டெஸ்ட் போட்டியின் கடைசி செஷன் என்பது போல பந்துகளை கோட்டை விட்டனர். ஆடுதளம் மெத்தனமாகத் தான் இருந்தது, இங்கிலாந்து பவுலர்கள் எல்லா பந்துகளையும் மெதுவாகத் தான் போட்டார்கள். நான் மறுக்கவில்லை. ஆனால் தோனியும் அவரது சகாவும் கடைசி ஓவர் வரை ஒற்றை ரன்களாக எடுத்து, வெற்றிக்கு தேவையான ரன்களின் சராசரியை 13இல் இருந்து 30க்கு மேலாக வேண்டுமென்றே கூலாக எகிற விட்டதை, ஒரு சின்ன ரிஸ்க் கூட எடுக்க முயலாததை நாம் எப்படி புரிந்து கொள்ள?
வெற்றி பெற சாத்தியமே இல்லாத நிலை என்றால், இந்தியா குறைந்த பட்சம் 300 ரன்களையாவது எட்டி நெட் ரன்ரேட்டை ஏற்றிட முயலலாம். ஆனால் அடுத்து இலங்கை மற்றும் வங்க தேசத்துடனான ஆட்டங்களில் வென்று நாம் சுலபமாக அரை இறுதியை எட்டிட முடியும் எனும் நிலையில் நெட் ரன்ரேட் பற்றி நாம் அக்கறைப்பட அவசியமே இல்லை. தோனியோ ஜாதவோ வேகமாய் அடிக்க முயன்று வெளியேறி இருந்தாலும் அது இந்தியாவின் உலகக்கோப்பை முன்னேற்றத்தை சற்றும் பாதித்திருக்காது. ஆனாலும் இந்தியா இந்த முற்றிலும் எதிர்மறையான நிலைப்பாட்டை எடுத்தது என்பது எப்படி புரிந்து கொள்ள? சற்று மெத்தனமான ஆடுதளத்தில் ஓவருக்கு 20 ரன்கள் அடிப்பது அசாத்தியம். ஆனால் ஓவருக்கு 12 என்பது நிச்சயம் சாத்தியமே. குறைந்தது முயற்சி பண்ணும் அளவுக்கு வாய்ப்புள்ள ஒரு இலக்கே. இந்தியா முயற்சி பண்ணக் கூட இல்லை, இறுதி வரை ஒற்றை ரன்களே ஓடியது என்பது இந்த வெற்றி இந்தியாவுக்கு அவசியம் இல்லை, எதிரணி ஜெயித்து விட்டுப் போகட்டும் என இங்கிலாந்து அணியுடன் இந்தியா முன்கூட்டியே ஒரு உடன்படிக்கை கொண்டிருந்ததோ எனும் சந்தேகத்தை கிளப்புகிறது.
கோலிக்கும் அசருதீனுக்கும் என்ன வித்தியாசம்?