அரசியல் சரிநிலையைப் பேணுவதில் ஒரு சமூக அங்கீகாரமும் அதில் இருந்து கிடைக்கும் சமூக அதிகாரமும் உண்டு. தமிழில் பல முற்போக்காளர்கள், எழுத்தாளர்கள் தம் கண்முன்னே நடக்கும் அநீதிகளைப் பற்றி பேசாமல் கடந்துவிடுவதும், சமூக அங்கீகாரம் மிக்க நியாயங்களை (status quo - ஒரு உதாரணத்துக்கு பெண்ணியம், நகரமயமாக்கல், தனிப்பட்ட வாழ்வில் பக்தி, வெளியே மத எதிர்ப்பு, தனிப்பட்ட வாழ்வில் சாதி பேணல், வெளியே சாதி எதிர்ப்பு) மட்டும் வரிந்து கட்டிக்கொண்டு பேசுவதும் இந்த அதிகாரத்துக்காகவே, தன்னல நோக்கத்திற்காகவே. ஜெயமோகனின் சில கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடில்லாமல் இருந்த போதும் அவரது கருத்து சொல்லும் துணிச்சலை, பொதுக்கருத்தைப் பற்றி, அரசியல் சரிநிலைகளை பொருட்படுத்தாது தன் மனசாட்சிக்காக பேசும் தீரத்தை நான் எப்போதும் மதித்திருக்கிறேன். பெண்ணியத்தின் பெயரால் இங்கு நடக்கும் அநீதிகளில் ஒன்றை இப்பேட்டியில் சரியாக சுட்டி இருக்கிறார். தமிழின் நூற்றுக்கணக்கான முக்கிய எழுத்தாளர்களில் ஒருவர் கூட பேசத்
துணியாத ஒரு உண்மை இது என்பதை கவனிக்க வேண்டும்.
போலி முற்போக்காளர்களை விட ஜெயமோகன் இவ்விசயத்தில் பல மடங்கு மேலானவர்.
உண்மைக்காக நின்றமைக்கு அவருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்!
Comments