தற்போது நடந்து வரும் ஆஸ்திரேலிய பயணத்தொடரில் இந்திய அணி ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி-20 தொடர்களை நிச்சயமாய் இழக்கும் என முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவரான மைக்கேல் வாஹ்ன் சொல்லியிருக்கிறார். இதை ஏற்கிறேன். முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா காலங்காலமாய் சொதப்பியே வந்துள்ளது. டிரா செய்ய முடிந்தால் சிறப்பு. ஒட்டுமொத்தமாய் இந்த ஆஸி தொடர் ஒரு நேரவீண். இதை கோலியும் அறிவார். ஆனால் அவர் மனமெல்லாம் பிறக்கவிருக்கும் தன் குழந்தை மீதே இருக்கும். வேறெந்த நம்பிக்கையூட்டும் நற்செய்தியும் அவருக்கு வரும் மாதத்தில் இல்லை. ஏனென்றால், இந்த தொடர் அவசரமாய் திட்டமிடப்பட்டு, மோசமாய் அணி தேர்வு செய்யப்பட்டு மோசமாய் எடுக்கப்பட்ட அட்லி படத்தைப் போல உள்ளது. ஷாமி, சஹல், சாஹா நல்ல உடல் தகுதியுடன் இல்லை. ஆனால் அவர்களை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து வந்த கிரிக்கெட் வாரியம் ரோஹித் ஷர்மா மட்டும் இந்தியாவில் அவர் பாட்டுக்கு திராட்டில் விட்டது ஏன் எனப் புரியவில்லை. ஒவ்வொரு வீரருக்கு ஒவ்வொரு நியாயமா எனும் கேள்விக்கு விடையில்லை. கோலி வழக்கம் போல இந்த அரசியலுக்கும் தனக்கும் சம்மந்தமில்லை என நழுவப் பார்க்கிறார...