“ பிரேமம் ” படம் குறித்து என்னுடைய மாணவர் ஒருவர் ஆய்வு செய்து கொண்டிருக்கிறார் (film studies இன் பகுதியாக ). “ பிரேமம் ” படத்தின் தாக்கம் அது வெளியான போது மாணவர்களிடம் எப்படி இருந்திருக்கிறது என்று ஆராயப் போகிறேன் என்றார் . நான் அவரது ஆய்வு நோக்கில் ஒரு சிக்கல் உள்ளது என்றார் . என்ன ? “ பிரேமத்தில் ” பாத்திரங்களின் ( ஜார்ஜ் மற்றும் அவனது நண்பர்களின் ) அனுபவம் , எதார்த்தம் என ஒன்று இல்லை . ஜார்ஜ் துவக்கம் முதலே தான் சினிமாவில் பார்த்த ரொமாண்டிக் காட்சிகளை போலச் செய்ய முயல்கிறான் . குறிப்பாக தொண்ணூறுகளில் வந்த மோகன் லாலின் படங்களை (“ நமக்கு பார்க்கான் முந்திரித் தோப்புகள் ” நேரடியாக குறிப்புணர்த்தப்படுகிறது .) அவன் எவ்வளவு ‘ பைங்கிளியாக ’ இருக்கிறான் என்பதை உணர்த்துவதற்காகவே படம் முழுக்க அங்கங்கே பட்டாம்பூச்சிகள் காட்டப்படுகின்றன . பட்டாம்பூச்சிகள் பற்றின ஒரு பகடியுடனே படம் முடியவும் செய்கிறது . இப்படத்தின் நகைச்சுவை முழுக்கவே ஜார்ஜின் வாழ்க்கையில் சினிமாவுக்கு வெளியே உள்ள எதார்த்தம் அவனது சினிமா ...