இன்று நான் ஒரு கூட்டத்தில் அமர்ந்திருந்தேன் . அப்போது என் அருகில் இருந்த நண்பர் சாட் ஜிபிடி இணையதளத்துக்கு சென்று அந்த தலைப்பைக் கொடுத்தார் . செயற்கை நுண்ணறிவு அரை வினாடியில் மொத்த உரையையும் கொடுத்தது . நண்பர் அந்த பேச்சாளர் பேசுவதற்கு பயன்படுத்திய பி . பி . டி சிளைடுகளைக் காட்டி “ ரெண்டும் ஒண்ணுதானே ?” என்றார் . ஆமாம் , ரெண்டும் ஒன்றுதான் ! என்னால் என் கண்களையே நம்ப முடியவில்லை . முன்பு நாம் ஒரு தலைப்பின் கீழ் பேசவோ கட்டுரை எழுதவோ வேண்டுமெனில் இணையத்தில் கிடைத்தும் கட்டுரைகள் , விக்கிபீடியாவை பயன்படுத்தி தகவல்களைத் தொகுத்து வடிவம் கொடுக்க வேண்டும் அல்லது ஏற்கனவே இருக்கும் கட்டுரையைத் திருட வேண்டும் . இந்த திருட்டை எழுத்துத்திருட்டு என்கிறார்கள் . பொதுவாக கட்டுரைகளிலோ கல்விப்புல இடுபணிகளிலோ இப்படியான திருட்டை செய்தால் சுலபத்தில் கண்டுபிடிக்கும் . இதற்குத் தனியாக மென்பொருளும் உள்ளது . ஆனால் சாட் ஜிபிடியைக் கொண்டு செய்யப்படும் திருட்டை அப்படி சுலபத்தில் கண்டுப்பிடிக்க இயலாது - ஏனென்றால் சாட் ஜிபிடி ...