சில நாட்களுக்கு முன்பு இயக்குநர் வசந்தபாலன் “ மகாநதியைப் ” பற்றி மீள்மதிப்புரை எழுதியதைப் படித்த போது எனக்கு அதைப் பற்றி வேறு சில விசயங்கள் தோன்றின . எனக்கு எப்போதெல்லாம் உலகத்தின் மீது கசப்பு ஏற்படுகிறதே அப்போதெல்லாம் “ மகாநதியை ” ஓட விட்டு என்னை மறந்து பார்த்திருப்பேன் . என்னை அதிகமாக ஈர்ப்பது இப்படத்தில் நியாயம் , தர்மம் , அறம் பற்றி கமல் எழுப்பும் கேள்விகளே . ஒரு சின்ன கோடு , அதைக் கடந்து அந்தப் பக்கம் போய் விடலாமே எனத் தோன்றாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் . ஆனால் செய்ய மாட்டோம் இப்படம் அது ஏன் என்பதைப் பற்றியதே எனத் தோன்றுகிறது . மனிதர்கள் தமது நலனுக்காக எதையும் செய்யலாம் , யாரையும் ஏமாற்றலாம் , சுரண்டலாம் , துன்புறுத்தலாம் . அதைப் பார்க்காமல் , கண்டுகொள்ளாமல் இருப்பது நல்லதா அல்லது அதைப் பற்றி யோசிக்க வேண்டுமா என “ மகாநதி ” கேட்கிறது . அதற்குள் இன்னும் தீவிரமாக கமல் பயணிக்கவில்லை என்றாலும் தமிழில் வண்ணப்படங்கள் வந்த பிறகு அந்த பகுதிக்குள் யாருமே அனேகமாக பயணிக்கவில்லை , சினிமாக...