கடந்த முறை பாகிஸ்தானை இந்தியா முறியடித்தபோதும் இது நடந்தது - ஏதோ உலகத்தையே வென்றது போல மக்கள் சமூகவலைதளங்களில் கொண்டாடினார்கள். ஊடகங்களும் அதை ஊக்கப்படுத்தின. இது இந்திய அணியின் அடுத்தடுத்த ஆட்டங்களின் தரத்தை பாதித்தது. அவர்கள் கவனம் சிதறியவர்களாகவும், அதிக அழுத்தத்தினால் தடுமாறுகிறவர்களாகவும் தோன்றினார்கள். அரை இறுதிப் போட்டியை நாம் அடைகிற இத்தருணத்திலும் அத்தகைய கொண்டாட்டங்களின் மிகையை நோக்கிச் செல்கிறோம். இதுவும் நம்மை பாதிக்கும் என்றே நம்புகிறேன். ஆகையால் இது நல்லதல்ல. மிகையை விட மட்டுப்படுத்தப்பட்ட கொண்டாட்டங்களே ஏற்றவை. தொடர்ச்சியாக சஞ்சு சாம்ஸன் உலகையே வென்றுவிட்டதாக நாம் பாவிப்பது, அந்த உணர்வை மிகைப்படுத்துவது அவரை மிகுந்த நெருக்கடிக்குள் தள்ளும். நம் அணி வீரர்கள் அதிகமாக சமூக வலைதளங்களைப் பின் தொடர்கிறார்கள். நாம் ஏன் ஒன்று முடியும் முன்பே அது நிறைவுற்றுவிட்டதாகப் பாவித்து கொண்டாட ஆரம்பிக்கிறோம்? இது என்ன மாதிரி மனநிலை? இதை நான் முன்பு கண்டதில்லை? இதற்கு சமூகவலைதளங்கள் மட்டுமே காரணமா? இல்லை, சமூகவலைதளங்கள் இந்தப் போக்கின் வெளிப்பாடு மட்டுமே. வெவ்வேறு சமூகக் காரணிகள் நம்மை இந்...