Skip to main content

Posts

Showing posts from July, 2010

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

வட-அமெரிக்க ஹைக்கூ

பெக்கி லைல்ஸ் Peggy Lyles இலையுதிர் மூடுபனி ... ஒரு முயலின் பற்தடங்கள் மக்னோலியா இலைகளில் nip of fall ... a rabbit's toothmarks in magnolia leaves

ஜான் பிராண்டி கவிதைகள் II

நேற்றிரவின் கனவு அதை எழுதினேன் பென்சிலின் தவறான முனையால் Last night’s dream Wrote it with the wrong end Of the pencil

மின்புத்தகங்கள்: திருட்டு, இலவசம் மற்றும் வியாபார உத்தி

ஈபுக் ரீடர் என்பது புத்தகங்களை மின்திரையில் படிப்பதற்கான ஒரு கருவி. கிட்டத்தட்ட ஒரு புத்தக அளவுக்கு திரை இருக்கும். நீங்கள் சாய்த்து திருப்புவதற்கு ஏற்றவாறு திரையும் தகவமைத்துக் கொள்ளும். PDF, Word போன்ற வழமையான கோப்பு வடிவங்களையும் திறந்து கொள்ளலாம் என்றாலும் ஈபுக் ரீடரின் தயாரிப்பு நிறுவனங்களே விற்கும் மின்புத்தகங்கள் தனித்துவமான கோப்பு வடிவை கொண்டவை. உதாரணமாக அமேசான் எனும் புத்தக விற்பனை நிறுவனம் வெளியிட்டுள்ள கிண்டில் எனும் மின்வாசிப்பு கருவிக்காக அறுபதினாயிரத்துக்கு மேற்பட்ட மின்புத்தகங்களை அந்நிறுவனம் பிரசுரித்துள்ளது. ஆனால் இப்புத்தகங்களை பிற நிறுவன மின்வாசிப்பு கருவிகளில் படிக்க முடியாது. அதற்கு கிண்டிலுக்கான மென்பொருளொன்றை பதிவிறக்கி இணைத்துக் கொள்ள வேண்டும். பொதுவாக தொழில்நுட்பம் தகவல் மற்றும் காட்சி ஊடகங்களை அணுகுவதையும் பயன்பாட்டையும் மிகவும் எளிதாக்கி வரும் நேரத்தில், புத்தகவாசிப்பு மற்றும் வாங்கலை அது மேலும் சிரமமானதாகவும், சிக்கலானதாகவும் மாற்றி வருகிறது.

வட-அமெரிக்க ஹைக்கூ

எய்லீன் ஷெரி Eileen Sherry பனித்துகள்கள் மூடிய கிளைகள் குருவியின் கால்தடங்கள் காற்றை நோக்கி செல்லும் snow dusted branches sparrow footprints lead into the air

ஜான் பிராண்டி ஹைக்கூ

ஒரு மழைத்துளி. உள்ளே விழுந்து விட்டது மற்றொன்று A raindrop. Inside it another Has fallen

முத்தையா முரளிதரன்: எண்களைக் கடந்த வரலாற்று நிஜம்

2010 ஜூலை 18-அன்று துவங்கும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்டு ஆட்டத்துடன் முத்தையா முரளிதரன் விடைபெறுகிறார். கடந்த பத்து ஆண்டுகளில் எந்த ஒரு கிரிக்கெட் அணியும் இப்படியான ஒரு தனிநபர் திறமையை தனது நிலைப்புக்காக நம்பி இருந்ததில்லை. இந்திய அணிக்கு டெண்டுல்கர், கும்பிளே, ஆஸ்திரேலியாவுக்கு பாண்டிங், வார்னே, மேற்கிந்திய தீவுகளுக்கு லாரா, ஆம்புரோஸ், வால்ஷ் போன்ற அதிமனிதர்கள் தொடர்ச்சியாக முன்னணியில் நின்று ஆடியுள்ள போதிலும் முத்தையா முரளிதரன் அளவுக்கு யாரும் அனாயசமாகவும் எண்ணிக்கையிலும் ஆட்டங்களை வென்று தந்ததில்லை.

விஜய மகேந்திரனின் நூல் விமர்சனக் கூட்டம்

விஜய மகேந்திரனின் நூல் விமர்சனக் கூட்டம் நேற்று மேற்கு கே.கே நகரில் உள்ள டிஸ்கவரி புக் பேலஸ் எனும் புத்தகக் கடையில் நடந்தது. தேர்ந்தவர்களுக்கே உரிய விமர்சன வட்டம் மற்றும் நூற்றுக்கணக்கானோர் கூடி இலக்கியப் பேச்சாளர்களை பாப்பையாவாகத் தூண்டும் பெருங் கூட்டத்துக்கும் மத்தியில் ஒரு புள்ளியில் இருந்தது இந்நிகழ்ச்சி. அதாவது பாப்பையாவுக்கும் எஸ்.ராமகிருஷ்ணனுக்கும் நடுவில். சுமார் இருபத்தைந்தில் இருந்து முப்பதுக்குள் இருப்பார்கள் பார்வையாளர்கள். இதை சரியாக கணிப்பது மிகவும் சிரமம். குறுக்கும் நெறுக்குமான எறும்பு சாரிகள் போல் கூட்டம் தொடர்ச்சியாக கலைந்து கூடிக் கொண்டிருந்தது. முதலில் கூத்துப்பட்டறையை சேர்ந்த தம்பிச்சோழன் சி.மோகன் மற்றும் ரமேஷ் பிரேதனின் கவிதைகளை நிகழ்த்திக் காட்டினார். பிறகு யவனிகா ஸ்ரீராம், ஐயப்ப மாதவன், தாரா கணேசன், பாக்கியம் சங்கர் ஆகியோருடன் நானும் பேசினேன்.

நாங்கள் காதுகளை திருப்பிய போது

என்னைப் பார்த்து தான் தலையணையில் தலை சாய்க்க படுக்கை ஓரமாய் உருள சதா காதுகளை பல கோணங்களிலாய் தூக்கி திருப்பி ஒட்டு கேட்க உணவையும் உறவையும் நுகர்ந்தவுடன் முதுகெலும்பை வால் போல் தூக்கிக் கொண்டு நடக்க பார்க்காதவற்றுக்குக் கூட பயந்து கொள்ள கற்றிருந்தது

மின்மினிப் பூச்சி லாந்தர் விளக்குகள் - மார்க்கரெட் சூலா

ஜூன் ஆரம்பத்தில் அயாபேவில் உள்ள குயவர் நண்பர் முராயாமா-சானிடம் இருந்து எங்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. “மேகி”, அவர் சொல்கிறார், “மின்மினிகள் வந்து விட்டன!” “சரி”, நான் சொல்கிறேன், “நாங்கள் உடனே வந்து விடுகிறோம்!” மலை கிராமங்கள் வழி நெளிந்து செல்லும் நாட்டுப்புற நெடுஞ்சாலை வழி இரண்டரை மணிநேர பயணத்தில் அயாபேவை அடையலாம். நானும் ஜானும் இரவு தங்குவதற்கான பையொன்றை கட்டி விட்டு பலகலைக்கழக வகுப்புகள் முடிந்த உடன் கிளம்புகிறோம். முராயாமா-சான், அவரது மனைவி அயாகோ மற்றும் பத்து வயது மகள் தொமோக்கோ தமது பழைய பண்ணை வீட்டில் எங்களை அன்பாக வரவேற்கிறார்கள். நாங்கள் மிகச் சிறந்த நண்பர்கள் என்றாலும், அவரது இறுதிப்பெயரால் தான் அழைப்போம். அவரது மனைவியும் அப்படித்தான். டோபூ, மீன் மற்றும் தோட்டத்து காய்கனிகளாலான ஒரு எளிய சாப்பாட்டை அயாக்கோ தயார் செய்கிறார். இருளத் தொடங்கியதும், நங்கள் வலைகள் மற்றும் கண்ணாடி ஜாடிகளை எடுத்துக் கொண்டு வெளியே செல்கிறோம். ட்சுயுவுக்கு [1] அவ்விரவு குறிப்பிடும்படியாக தெளிவாக இருக்கிறது. நட்சத்திரங்கள், நெல்வயல்களில் நட்சத்திர பிரதிபலிப்புகள் ஓ! மின்மினிக...

அபரன்: தீமையின் இரட்டை முகங்கள்

தொண்ணூறுகள் வரையிலான மலையாள சினிமாவின் பொற்கால படைப்பாளிகளில் தீமையை நுட்பமாக ஆராயும் கதைகளை சொன்னவர் பி.பத்மராஜன். அக்காலத்து மேற்கத்திய இலக்கியம் மற்றும் உலக சினிமா மலையாள பொற்கால படங்களை தீவிரமாய் பாதித்துள்ளது ஒரு சுவாரஸ்யமான விசயம். தஸ்தாவஸ்கியின் இடியட் நாவலை உல்டாவாக்கி எம்.டி வாசுதேவன் நாயர் ”நகக்‌ஷதங்கள்” திரைக்கதையை எழுதினார். காப்ரியல் கார்சியா மார்க்வெஸ் பற்றிய குறிப்பு வரும் ஒரே இந்திய படம் பி.பத்மராஜனின் ”மூநாம்பக்கம்” தான்.

இ.பா 80வது பிறந்த நாள் விழா – சில குறிப்புகள்

இக்கூட்டம் நேற்று (ஜூலை 9) மாலை தேவநேயப்பாவாணர் அரங்கில் நடந்தது. இந்த கூட்டத்தின் ஆகக் கூர்மையான கருத்துக்கள் இறுதியாக ஏற்புரை வழங்கிய இ.பாவிடம் இருந்து வந்ததால் அதனை முதலில் சொல்லி விடலாம். இ.பாவின் குறும்பேச்சு ஒரு குத்துச் சண்டை ஹைலைட்ஸை ஒத்திருந்தது. அத்தனை பஞ்ச் வசனங்கள். ஏறத்தாழ இரவு ஒன்பதரைக்கு களைத்து கடுப்பாகி இருந்த பார்வையாளர்களுக்கு அத்தனையும் ரசிக்கும் படியாக இருந்தன.

இடம் பெயர்தல்

ஒவ்வொரு ஜன்னல் திண்டிலாய் ஏறி எட்டிப் பார்க்கும் பூனை – இடம் பெயரும் கொக்குகள்

கருப்பை வாசலில் தேர்வு - டெட் ஹியூக்ஸ்

இந்த குட்டி குச்சிக் கால்கள் யாருக்கு சொந்தம்? மரணம் இந்த முள்ளடர்ந்த கருகிய தோற்றமளிக்கும் முகம் யாருக்கு சொந்தம்? மரணம் இந்த இப்போதும் இயங்கும் நுரையீரல் யாருக்கு சொந்தம்? மரணம் இந்த அன்றாட தேவைக்கான தசைகளின் தோல் யாருக்கு சொந்தம்? மரணம் இந்த சொல்லுக்கடங்கா வயிற்றுப்பகுதி யாருக்கு சொந்தம்? மரணம்

காகமும் அம்மாவும் - டெட் ஹியூக்ஸ்

காகம் அழுத போது அவன் அம்மாவின் காது கட்டையாக கருகிப் போனது. அவன் சிரித்த போது அவள் குருதியால் அழுதாள் அவள் முலைகள் அவள் உள்ளங்கைகள் அவளது நெற்றி எல்லாம் குருதியால் அழுதன. ஓரடி எடுத்து வைக்கப் பார்த்தான், பிறகு மற்றோர் அடி, மீண்டும் ஓரடி – ஒவ்வொன்றும் அவள் முகத்தை நிரந்தரமாய் தழும்பாக்கியது.

வம்ச வரலாறு – டெட் ஹியூக்ஸ்

ஆரம்பத்தில் அலறல் இருந்தது அது குருதியை பெற்றது அது விழியை பெற்றது அது அச்சத்தை பெற்றது அது சிறகை பெற்றது அது எலும்பை பெற்றது அது கிரானைட்டை பெற்றது அது வயலட் பூவை பெற்றது

காகத்தின் வாழ்வும் பாடல்களிலும் இருந்து - டெட் ஹியூக்ஸ்

இரு செவிவழிக் கதைகள் I கருமை வெளியே இல்லாத கண்ணாய் இருந்தது கருமை உள்ளிருக்கும் நாவாக இருந்தது கருமை இதயமாக இருந்தது கருமை ஈரல், கருமை ஒளியை உறிஞ்ச முடியாத நுரையீரல் கருமை சத்தமான சுரங்க வழியுடனான குருதி கருமை உலையில் திணிக்கப்பட்ட குடல்

கதை சொல்ல வாழ்கிறேன் (மார்க்வெஸ்): அத்தியாயம் 21

ஒரே உறுதிப்பாடு அவர்கள் எல்லாவற்றையும் தங்களோடு கொண்டு போயினர் என்பதே: பணம், டிசம்பர், ரொட்டிக் கத்தி, மதியம் மூன்று மணிக்கு முழங்கும் இடி, மல்லிகை வாசம், காதல். மிச்சம் இருந்தது எல்லாம் தூசு படிந்த வாதாம் மரங்கள், அலையதிர்வு கொள்ளும் தெருக்கள் மற்றும் நினைவுகளால் நிலைகுலைந்த, பேச்சில் அமர்த்தலான மக்கள் குடியுருக்கும், துருபிடிக்கும் தகரக்கூரை கொண்ட, மரவீடுகள். தகரக் கூரையில் தெறிக்கும் மழை போன்ற கூர்மையான தடதட ஒசை கேட்டு நான் வியப்புற்ற போது தான் அந்த மதிய வேளையில் டாக்டர் என்னிடம் முதன்முறையாக் கவனம் காட்டினார். “அவை வான்கோழிகள்”, அவர் என்னிடம் சொன்னார்; பிறகு மூடியிருந்த கதவை நோக்கி தன் அயர்வான சுட்டுவிரலால் சுட்டி முடிவாக சொன்னார், “ராத்திரியில் படு மோசம், ஏன் என்றால் தெருக்களில் மேலும் கீழுமாக ஆவிகள் நடமாடுவதை கேட்கலாம்”