Skip to main content

Posts

Showing posts from December, 2010

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

நிலவு தீண்டிய மரம்

பியாட்ரைஸ் பிரிஸ்மேன் (வட அமெரிக்கா) BEATRICE BRISSMAN (வட அமெரிக்கா) மௌனம் மீள மீள காத்துக் காத்திருக்கும் விதம் ... அடுத்த லூன் பறவைக் கத்தலுக்கு The way silence waits and waits ... for the next cry of the loon

இந்தியா ஏன் வெல்ல வேண்டும்?

தென்னாப்பிரிக்காவில் நடந்து வரும் டெஸ்டு ஆட்டத்தில் இந்தியாவால் ஆட்டத்தை காப்பாற்ற முடியும் மற்றும் வெல்லக் கூட முடியும் என்று மீடியா விமர்சகர்கள் நம்பத் தொடங்கி உள்ளனர். இதற்கு காரணம் எந்த ஒரு கிரிக்கெட் தர்க்கமோ விவேகமோ அல்ல.

தென்னாப்பிரிக்க டெஸ்டு தொடர் அம்பலமாக்குவது என்ன?

இந்திய அணி உள்ளூர பீதியுற்று இருக்கிறது என்பதைத் தான். 16 டிடம்பர் 2010 தொடங்கிய டெஸ்டு ஆட்டத்தின் முதல் நாளில் ஆடுகளம் பந்து வீச்சுக்கு எந்தளவுக்கு ஆதரவு அளித்தது என்பது விவாதத்துக்கு உரியது. ஸ்விங் குறைவாகவே இருந்தது.

விடியலுக்கு முன்னான மழை

ஜான் பிராண்டி John Brandi காற்றிறங்கின டயர் பசுக்கள் வெறுமனே நிற்கும் பிறகு மெல்ல திரும்பும் நோக்க flat tire the cows just stand and slowly turn to look

நீட்சே: அறிமுகக் குறிப்புகள் 7

ஷோப்பென்ஹெர்: உள்ளிருந்து இயக்கும் ஆற்றல் - 1   ஒரு புத்தகத்தாலோ அல்லது மனிதராலோ தூண்டப்படும் முன் ஒரு மனிதனின் தேடல் எங்கிருக்கிறது? ஒரு மனிதனின் தேடல் அவனது நீண்ட சிந்தனை மரபின் அவனறியாத ஒரு தொடர்ச்சியா? ஷோப்பென்ஹெர் (1788-1860) ஒரு ஜெர்மானிய தத்துவஞானி. இவரது சோர்வுவாத கோட்பாடு தத்துவவரலாற்றில் ஒரு திருப்புமுனை. ஷோப்பென்ஹெரின் ஊக்க கோட்பாட்டை நாம் இவ்வாறு எளிதாக விளக்கலாம்.

நந்தலாலா: உருவகக் குப்பையில் ஒரு மாணிக்கம்

 செல்வராகவனின் “ ஆயிரத்தில் ஒருவன் ” எப்படி தமிழின் முதல் மாயஎதார்த்த படமோ “ நந்தலாலாவும் ” தமிழின் முதல் உருவகப் படமே. உருவகம் மிஷ்கினின் சினிமா மொழியாக என்றும் இருந்துள்ளது. காட்சியமைப்பில் இருந்து நடிப்பு வரை உருவகத்தன்மையை கொண்டு வர அவர் எதார்த்தத்தை கத்தரிக்கிறார். ” சித்திரம் பேசுதடி ” , “அஞ்சாதே ” ஆகிய படங்களில் இருந்து நாம் இதற்கு ஏகப்பட்ட உதாரணங்கள் தர முடியும்.

பிறந்த நாளின் போது

நேற்று பிறந்தநாளின் போது எப்படி முப்ப்து வயது வரை வாழ்ந்தோம் என்று வியப்பு ஏற்பட்டது. 

கல்கியின் சுண்டு: சுருங்குகிறதா விரிகிறதா உலகம்?

கல்கியின் “ சுண்டுவின் சந்நியாசம் ” என்ற சிறுகதை சற்று மிகையான ஒரு வேடிக்கை கதை. கல்கியின் நகைச்சுவை அ.மித்திரன் (அல்லது சுஜாதா) போல் அல்லாது சற்று அட்டகாசமான நகைச்சுவை. மேற்சொன்ன மிகை காரணமாகவே கலைத்தன்மை குறைவாக் இருந்தாலும் இது ஒருவிதத்தில் ஒரு முக்கியமான கதை. எப்படி என்பதை பார்க்கப் போகிறோம்.