அம்மா போன பிறகு
ஒரு மரக்கன்றை நட்டு
நீரூற்றலாம்
பூக்களை மென்மையாய் கொய்து
பெரும் மலைத் தொடர் ஒன்றில்
எறும்பு போல் ஏறிப் பார்க்கலாம்
மழைத் தாரைகளின் தொடர்ச்சியை
உன்னிப்பாய் பார்க்கலாம்
ஆழமற்ற உறவுகளுடன்
மணிக்கணக்காய் உரையாடலாம்
உடனே முடியாத
எதையும் செய்யலாம்
அம்மாவை பற்றி அசட்டையாக இருக்கலாம்
நீரில் துளி ரத்தம் போல்
வெறுப்பை கக்கலாம்
அம்மாவுக்காக காத்திருப்பது
எத்தனை பாசாங்கானது
என்று நினைத்துக் கொள்ளலாம்
