Skip to main content

Posts

Showing posts from November, 2011

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

காதல் சந்திக்கும் சவால்கள் – குருதியும் ஊடகங்களும்

காதலுக்காக எக்காலத்திலும் குருதி சிந்தப்பட்டுள்ளது. இது பணம், சமூக அந்தஸ்து, சாதிப் பற்று ஆகிய காரணங்களினால் நடந்து வருவது. வடக்கில் இதற்கு honor killing என்று பெயர் உண்டு. ஆனால் சமகாலத்தில் தான் காதலுக்காக அல்ல காதலை தடை செய்யும் காரணத்துக்காக கடுமையான வன்முறை செயல்களில் குறிப்பாய் இளம் தலைமுறையினர் ஈடுபட்டு வருவதை காண்கிறோம்.

ஹர்பஜன் சிங்கிடம் இல்லாத ஒன்று அஷ்வினிடம் உள்ளது

97 நவம்பரில் அனில் கும்பிளே இண்டிபெண்டன்ஸ் கோப்பை அரையிறுதியில் சயத் அன்வரால் ஒரு ஓவரில் தொடர்ச்சியாக சிக்சர்கள் விளாசப் பட்ட காரணத்தால் அணியில் இருந்து சற்று காலம் விலக்கி வைக்கப்பட்டார். அனில் உள்ளூர் பயிற்சியாளர்களிடம் அலோசித்து தன் பிழையை அறிந்து தயார் ஓட்டத்தில் சில அடிகள் குறைத்து திருத்தி ரஞ்சி கோப்பைக்கு திரும்பு விக்கெட்டுகள் குவித்து தேசிய அணிக்கு திரும்பிய போது அவரது இடம் பத்திரமாக இருந்தது.

இன்றைய இலக்கிய வாசகன்

இன்றைய இலக்கிய வாசகன் ஜனரஞ்சக வாசிப்பில் இருந்து சமீபமாக தீவிர இலக்கியம் நோக்கி வந்தவன் அல்லது எந்த வாசிப்பு பயிற்சியும் அற்றவன். அவனுக்கு வாசிப்பு என்பது ஒரு அடையாள அட்டை.

இணையம் இன்று இலக்கியத்தை எப்படி பாதித்துள்ளது

கடந்த சில வருடங்களில் இணையம் தமிழ் உரைநடையை கவனிக்கும்படியாய் மாற்றி உள்ளது. சுஜாதா ஒருமுறை குறிப்பிட்டது போல், தொண்ணூறுகளில் தீவிர உரைநடையாளர்கள் சிடுக்காக நீளமாக எழுதுவதை கௌரவமாக கருதினார்கள். “ பொதுவாகவும் தனிப்பட்ட முறையில் நம்பப்படுவது போல் எனக்கு சளி பிடித்துள்ளது என்பதை சொல்லியாக வேண்டும் என்று நினைக்கிறேன் ” என்பது போல் எதையும் வளைத்து சுழித்து சொன்னால் மேலானது என்று நினைத்தார்கள்.

ஆங்கிலம் – நமக்கு இடையிலான ஒரு பள்ளத்தாக்கு

ஒரு சமூக அந்தஸ்து, நாகரிக அடையாளம் என்பதை விட ஆங்கில கற்பதன் நோக்கம் இன்று வேறொன்றாக இருக்கிறது. அது நம்மை நோக்கி விரிந்துள்ள பல்துறை அறிவை பெற, சமூக வலைதளங்களை அணுக மற்றும் பன்னாட்டு நிறுவன வேலை வாய்ப்புகளை அடைவதே ஆங்கிலம் வெறும் ஒரு மொழி, நமது பண்பாட்டிலே எல்லா அறிவுப் பொக்கிஷங்களும் உள்ளன, வெறும் திருக்குறள் படித்தாலே உலக தத்துவ நூல்களை படித்ததற்கு நிகர் போன்ற அசட்டு வாதங்கள் இன்று பின்னே தள்ளப்பட்டு விட்டன. மொழிவாரி மாநிலங்கள் பிரிந்த ஐம்பதுகளில் மொழி உணர்வை வழிபட்டதற்கான ஒரு சமூக அரசியல் தேவை இருந்தது. அது இன்று இல்லை.

தமிழக வானிலை அறிக்கை – மோனிகா, ரமணனில் இருந்து கடவுள் வரை

ஆரம்பத்தில் வானிலை அறிக்கைகள் தொலைக்காட்சி செய்தியின் முடிவில் சில அசுவாரஸ்யமான வாக்கியங்களாக சுருக்கப்படுவதில் இருந்து இன்று கிராபிக்ஸ் மற்றும் வரைபடங்களையும் கொண்டு செல்வி மோனிகாக்கள் திக்கித் திக்கி தலையை ஆட்டி ஆட்டி விளக்குவது வரை வளர்ந்துள்ளது.

மனச்சோர்வும் நகரத்து பெண்களும்

உலகமெங்கும் நகரவாசிகள் அதிகமாக மனச்சோர்வினால் பாதிக்கப்படுகிறார்கள். நகரங்களில் மிகுதியான மக்கள் தொகை மற்றும் போதிய உறவுநிலைகள் இன்மை ஆகியன ஒரு முக்கிய காரணங்கள். மனிதர்கள் பொதுவாக ஜனநெருக்கடி உள்ள இடங்களில் ஒருவித பதற்றத்தை, பாதுகாப்பின்மையை உணர்கிறார்கள்.

மனு ஜோசப்பின் “தீவிர மனிதர்கள்” (Serious Men): வெங்காயம் தேவைப்படாத நாவல்

2010இன் தெ ஹிந்து சிறந்த புனைவுக்கான விருதை வென்ற மனு ஜோசப்பின் இந்நாவல் ஆங்கில இந்திய நாவல் மரபில் தனித்துவம் பொருந்தியது. ஆர்.கெ நாராயண், அருந்ததி ராய், அனிதா நாயரை விட தென்னிந்திய சமூக வாழ்வை அவர் தீவிரமாக அணுகியுள்ளார். வழக்கமாக ஆங்கில இந்திய நாவல்களில் காண்பது போல் ஒரு பிராந்திய அடையாளத்தை மொத்த இந்தியாவுக்கான அடையாளமாக மாற்றி உள்ளார்.

ஷோயப் அக்தரின் உலகம்: சர்ச்சையும் சிறுபிள்ளைத்தனமும்

பாகிஸ்தான் அணியின் ஷோயப் அக்தர் துணைக்கண்டத்தின் முதல் முழுவேக பந்து வீச்சாளர். தன் ஆட்டவாழ்வின் ஆரம்பம் முதல் இறுதி வரை ஆடுகளத்தின் ஆதரவு தேவைப்படாத ஒரே வேகவீச்சாளர். ஸ்விங் செய்வது பற்றிக் கூட அதிகம் அலட்டிக் கொள்ளாதவர். மிகுவேகத்தில் குச்சிக்கு நேராக வரும் பந்து, தோள்பட்டை உயரத்தில் எழும் பந்து எனும் இரு ஆயுதங்களை மட்டுமே பிரதானமாய் நம்பியவர். இதே காரணத்தினாலே கூர்மையான ஒரு விக்கெட் கீப்பரோ ஸ்லிப் கேட்சர்களோ ஷோயப்புக்கு முக்கியமல்ல. புத்திசாலித்தனமான கள அமைப்பு கூட பொருட்டல்ல.

வெற்றி பெற்ற மனிதர் எல்லாம் ...

நேர்மறைவாதம் ஒரு வலுவான சமூக தொடர்புறுத்தல் பண்பு. பொதுவாக முழுக்க நேர்மறையானவர்கள் எதிர்மறையானவர்கள் என இருசாராரையும் உடனடியாக நம்ப மக்கள் தலைப்படுகிறார்கள். இவர்களில் நேர்மறையானவர்களுக்கு ஆரம்பத்தில் மக்களிடையே பரவலான வரவேற்பு இருக்கும். நேர்மறையானவர்கள் வாழ்வில் வெற்றி பெறுவார்கள் என்று எண்ணற்ற முறை பேசி, எழுதப்பட்டுவிட்டது.

எங்கு போகிறது இந்திய கிரிக்கெட்?

உலகக் கோப்பையை வென்று டெஸ்ட் தரப்பட்டியலில் முதல் இடத்தையும் முதன் முறை கைப்பற்றிய நிலையில் இந்தியா ஏகப்பட்ட சவால்களை எதிர்கொள்கிறது. இது ஒரு நகைமுரண். 99இல் இருந்து ஆஸ்திரேலியா தொடர்ந்து மூன்று முறை உலகக்கோப்பை வென்ற போதும், இலங்கை அதற்கு முன் வென்ற போதும் இவ்வணிகள் தமது வெற்றியை தொடர்ந்து சில அல்லது பல வருடங்கள் மிக தரமாக ஆடின. வலுவான அரண்கள் போல நின்றன. ஆனால் இரட்டை சாதனைகளின் அடுத்த நிமிடமே இந்தியா மணல் கோட்டை போல சரிகிறது.

இருநாள் இலக்கிய விழா: எழுத்தாளர்களும், கதாபாத்திரங்களும், எளிய மனிதர்களும்

 தமிழில் பிரபலமாகாத எழுத்தாளர்கள் கூட தங்கள் பெயருக்கு விருது அறிவித்து ரொம்ப பிரபலமான ஒருவருக்கு அன்றாடம் கொடுத்து விடுகிற ஒரு அதிரடி நிலைமையில் தேசிய பத்திரிகையான தெ ஹிந்து வேறுவழியில்லாமல் போன வருடம் சிறந்த புனைவுக்கான இலக்கிய விருதொன்று அறிவித்தது. அதை பத்திரிகையாளரும் பத்தியாளருமான மனு ஜோசப் தனது Serious Men என்கிற அறிவியல் சமூக பகடி நாவலுக்காக வென்றார். சர்ச்சை ஒன்றும் இல்லை. பரவலாக பாராட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து இவ்வருடம் தற்போதைய மோஸ்தர் படி பெரும் கார்ப்பரேட் விளம்பர ஆதரவுடன் தெ ஹிந்து Lit for Life என்ற தலைப்பில் செப்டம்பர் 29, 30 ஆம் தேதிகளில் இலக்கிய விழா நடத்தியது.