பிரதமர்: “நாளைக்கு மீடியாவுக்கு கொடுக்க
வேண்டிய ரிப்போர்ட் ரெடியா?”
ஆலோசகர்: ”இதோ பாருங்க ரெடி... அடுத்த பத்தே
நாட்களுக்குள் இந்தியா முன்னேற்றம் பெற அதிரடி திட்டம். அடுத்த மூன்று
மாதங்களுக்கான தேச முன்னேற்றத்திற்கான இலக்குகளை பிரதமர் அறிவித்தார்.
ஒவ்வொன்றுக்கும் தனித்தனி நிறங்களை அளித்துள்ளார். சிவப்பு வறுமைக்கு, வெள்ளை
பொருளாதாரத்துக்கு, பச்சை விவசாயத்துக்கு. இப்பிரச்சனைகள் தீரும் வரை இனி மேல்
அவர் இம்மூன்று நிறங்கில் தான் குர்தா அணிவார்”
பிரதமர்: “ஏதோ ஒண்ணு குறையுதே!”
ஆலோசகர்: “ம்ம்ம் சரி இதை பாருங்க. அமைச்சர்களின்
அறைகளுக்கு சென்று பிரதமர் அதிரடி சோதனை இட்ட போது அன்றைக்கான டார்கெட்டை
முடிக்காத ஜூனியர் அமைச்சர் மாட்டினார். பிரதமர் கண்டித்ததில் அவர் கண்ணீர்
விட்டார்.”
பிரதமர்: “இது சூப்பர். அப்படியே பிரதமர்
அவரை அணைத்து ஆறுதல் கூறினார் என்றும் போடு”
ஆலோசகர்: “சரி சார். லேட்டாச்சு நான் அப்போ
கிளம்பிறேன்”
பிரதமர்: “அது சரி, ஆனா நான் அடுத்த மூன்று
மாதங்களில் ஜப்பான், ஜெர்மனி, ஆஸ்திரேலியாவுக்கு நான் பயணிக்கும் போது அங்கு
என்னெல்லாம் பேசினேன், என்னைப் பார்த்து அந்நாட்டு பிரதமர்கள் எப்படியெல்லாம்
வியந்து பாராட்டினார்கள் என்பதை பற்றி ரிப்போர்ட் ரெடி ஆயிடுச்சா?”
ஆலோசகர்: “சார் நீங்க இன்னும் வெளிநாடே
போகலியே? போற டைம் எழுதி கொடுத்திடறேன்”
பிரதமர்: “இல்ல, எழுதி காட்டி கிட்டு
வீட்டுக்கு போனா போதும்”
ஆலோசகர்: “சரி சார். அப்புறம் உங்களை
பார்க்க அமைச்சர்கள் காத்திருக்காங்க”
பிரதமர்: “வரச் சொல்லு”
அமைச்சர்கள் வரிசையாக வந்து வணங்கி
நிற்கிறார்கள்.
பிரதமர்: “ம்ம்ம் இந்த மாதிரி கும்பிடு
போடறங்களை எனக்கு புடிக்காது. சொன்ன வேலையை ஒழுங்கா பண்ணனும்... அப்புறம் அந்த
பொண்ணு மேட்டர் என்னாச்சு?”
அமைச்சர்கள்: “?...”