இம்மாதம் பத்தாம் தேதி ஷிலோங்கில்
நடைபெறும் விழாவில் சாகித்ய அகாதெமியின் யுவபுரஸ்கார் விருதை வாங்கப் போகிறேன். அடுத்த
நாள் விருதாளர்களின் சந்திப்பில் என் படைப்பு வாழ்க்கை பற்றி பேசப் போகிறேன். இத்தருணத்தில்
என் எழுத்து வாழ்க்கையை துவக்கி வைத்த நண்பர் மனுஷ்யபுத்திரன், எழுத்தாளனாகும் ஆசையை
என்னுள் விதைத்த ஜெயமோகன், புனைவுலகுக்குள் வர தூண்டுதல் அளித்த எஸ்.ரா, தொடர்ந்து
எனக்கு உறுதுணையாக இருக்கும் தக்கலை கலை இலக்கிய பெருமன்ற நண்பர்கள், கடந்த 6 வருடங்களாய்
ஒவ்வொரு மாதமும் எனக்காய் சில பக்கங்கள் ஒதுக்கும் அம்ருதா பத்திரிகை, டி.வி மீடியாவில்
அறிமுகப்படுத்தி எனக்கு முகப்பரிச்சயம் உருவாக்கிய, என் ஒரு கட்டுரையை ஒரு நிகழ்ச்சியின்
பேசுபொருளாகவே மாற்றிய “நீயா நானா” ஆண்டனி, அன்பு மனைவி காயத்ரி ஆகியோரை அன்புடன் நினைத்துக்
கொள்கிறேன். இந்த விருதை விட எனக்கு பெரிதான வாசகர்களை பேரன்புடன் நெஞ்சோடு அணைக்கிறேன்.
புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share
