கிரிக்இன்போ
(cricinfo) இணையதளம் உலகின் தலைசிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் எனும் விருதை விவியன் ரிச்சர்ட்ஸுக்கு அளித்திருக்கிறது. இது சர்ச்சைக்குரிய தேர்வு.
ரிச்சர்ட்ஸ் அட்டகாசமான மட்டையாளர் தாம். ஆனால் அவரது ரெக்கார்டையும் சச்சின் ரெக்கார்டையும் ஒப்பிட்டு பார்த்தாலே யார் மேல் என தெரிந்து விடும். ரிச்சர்ட்ஸ் 187 ஒருநாள் ஆட்டங்களில் 11 சதங்கள் அடித்திருக்கிறார். சச்சின் 463 ஒருநாள் ஆட்டங்களில் 49 சதங்கள் அடித்திருக்கிறார்.
இவ்வளவு ஆட்டங்கள் ஆடி நிலைக்க நீங்கள் சிறந்த உடல் திறன் கொண்டவராக, மனக்குவிப்பு திறன் மிக்கவராக, தொடர்ந்து நன்றாக ஆடுபவராக, மாறும் காலத்துடன் தன் ஆட்டத்தை தகவமைப்பவராக இருக்க வேண்டும். ஆனால் ரிச்சர்ட்ஸ் குறுகிய காலம் ஆடியவர் என்பதால் அவர் சச்சின் அளவுக்கு இந்த திறன்கள் கொண்டவரா என நாம் கணக்கிட இயலாது.
சச்சின் போன்று நானூறுக்கு மேல் ஆட்டங்கள் ஆடியிருந்தால் அவரால் இந்த சராசரி மற்றும் ஸ்டிரைக் ரேட்டை தக்க வைத்திருக்க முடியுமா என்பதும் கேள்வியே. மேலும் சச்சின் ஒருநாள் ஆட்டத்தை ஒரு கலையாக மாற்றியவர். இரு பத்தாண்டுகளில் அவர் எவ்வளவோ வித்தியாசமான திறமையான பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டு, கிட்டத்தட்ட எல்லா நாடுகளிலும் சென்று ஓட்டங்கள் குவித்திருக்கிறார். இந்திய சுற்றுப் பயணத்தின் போது சந்திரசேகரின் சுழல் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் ரிச்சர்ட்ஸ் திணறினார். அவர் வார்ன், முரளி, சக்லைன் போன்றவர்களை சுழலும் ஆடுதளத்தில் எப்படி ஆடியிருப்பார் என்பது கேள்வியே - குறிப்பாக ஒருநாள் ஆட்டங்களில். மேலும் தொழில்நுட்ப ரீதியாகவும் சச்சின் ரிச்சர்ஸை விட பல மடங்கு மேலானவர்.
எனக்கு இந்த தேர்வில் உடன்பாடில்லை. ஓட்டுப்போட்ட ஐம்பது பேரில் பெரும்பாலானோர் சச்சின் மீதான பொறாமையை இதில் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். சச்சின் தான் கிரிக்கெட் அறிந்த எவரின் தேர்வாக இருப்பார்.
http://www.thecricketmonthly.com/story/846325/still-the-king