மூன்று மணி போல ஓட்டல் பணியாளர்கள்
ஒன்றாய் மேஜையை சுற்றி இருந்து உணவருந்தினர். பத்து வயது மதிக்கத்தக்க வடகிழக்கு மாநில
சர்வர் பையன் ஒரு சின்ன தட்டில் கொஞ்சம் கெட்டிப்பட்ட சுடுசோறும் அதில் பருப்பும் ஊற்றி
அமர்ந்தான். அடிக்கடி சூடு தாளாமல் விரல்களை உதறியபடி அதை விண்டு விண்டு ஆர்வமின்றி
தின்று கொண்டிருந்தான். தன் நண்பனிடம் கண்காட்டி ஏதோ நகைச்சுவையை பகிரும் விளையாட்டு
ஆர்வம். அவன் அம்மா பார்த்தால் சரியாய் சாப்பிடாமல் நோஞ்சானாய் போகிறாயே என கவலை கொள்ளலாம்.
எனக்கு ரசிக்கவே தோன்றியது.
மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...
கருத்துகள்