ஒரு குறுநாவலை இப்போது தான் எழுதி
முடித்தேன். துப்பறியும் நாவல். பெஞ்சமின் பிளாக்கின் Christine Falls நாவல் படித்த
போது குற்றத்தை யார் செய்திருக்கக் கூடும் எனும் புதிரை அவிழ்ப்பது நோக்கி செல்வதாய்
மட்டும் ஒரு துப்பறியும் நாவல் இருக்க வேண்டியதில்லை என உணர்ந்தேன். ஒரு உளவியல் விசாரணையாக
அந்த துப்பறியும் நாவல் எழுதப்பட்டிருக்கும். நானும் சற்று அந்த பாணியில் தான் முயன்றிருக்கிறேன்.
எனக்கு தூண்டுகோலாய் அமைந்த மற்றொரு முக்கியமான நூல் டோம் ஒ கேரொலின் Paedophilia –
The Radical Case. அந்நூலைக் கொண்டு வேறொரு நாவலை முன்பு எழுத முயன்ற போது ஏற்பட்ட
ஒரு அறச்சிக்கல் காரணமாய் பாதியில் நிறுத்த நேர்ந்தது. ஆனால் இந்நாவலின் வடிவம் காரணமாய்
அறச்சிக்கல்களை எளிதாய் என்னையே அறியாமல் தாண்டிச் சென்று விட்டேன். நான் எழுதிய புத்தகங்களில்
மிகச்சிறியதாக இதுவே இருக்கும். இலக்கிய நோக்கின்றி ஜாலியான விளையாட்டாக கருதி எழுத
வேண்டும் என ஆரம்பத்திலேயே முடிவு செய்தேன். முடிந்தவரை இந்நோக்கததை தக்க வைத்தேன்.
இப்போதைக்கு தலைப்பு “கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்”. எப்படி உள்ளது? Working
title தான். பிரசுரத்துக்கு முன் தோன்றினால் மாற்றி விடுவேன்.
புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share