வீட்டில் டி.வி ரிப்பேர் ஆகி விட்டது.
டி.வி மெக்கானிக் வந்து பார்த்து விட்டு சொன்னார் “டி.வி மாதிரி எலக்டிரானிக் சாமான்
எல்லாம் மனித உயிர் போலத் தான். ஓடுற வரைக்கும் ஓடும். எப்போ நிக்குமுன்னு சொல்ல முடியாது.”
நான் முன்பு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் போது பக்கத்து படுக்கையில்
ஒரு மூதாட்டி கிடந்தார். ஒருநாள் அவருக்கு முழுக்க பிரக்ஞை போய் விட்டது. அவரது கணவன்
வந்து பார்த்து விட்டு ஒவ்வொரு டாக்டராக அழைத்து கன்னாபின்னா என்று கத்தினார். அவர்கள்
முழித்தார்களே தவிர சரியாய் பதில் சொல்லவில்லை. ஒரே ஒருத்தர் சொன்னார் “நீங்க இவங்களுக்கான
கட்டணத்தை இன்னும் செலுத்தல. அதை போய் செலுத்திட்டு வந்தீங்கன்னா சிகிச்சை தொடர்வாங்க.
ஏன்னா பணம் கட்டாததினால மருந்து நிப்பாட்டி வச்சுருக்காங்க”. அவர் உடனே பணம் செலுத்த
சென்றார். முந்தா நாளில் இருந்தே அவர் படுக்கை பக்கம் எந்த செவிலியோ மருத்துவரோ போகவில்லை
என்பது எனக்கு நினைவு வந்தது. இப்படி சிகிச்சையை நிறுத்துவதனால் அவருக்கு உயிர் போனால்
என்னாவது என்றெல்லாம் அவர்கள் கவலைப்படவில்லை. அந்த மூதாட்டி எனும் டிவியின் மின் தொடர்பை
தற்காலிகமாய் துண்டித்து விட்டார்கள்.
புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share