இன்றைய தினம்
ஒரு சின்ன பூவை
யாருக்கும் தெரியாமல்
மலர செய்வோம்
ஒரு சின்ன பூ பூப்பது
பூமியை பூட்டும்
கடவுளின் முறுகிய திருகலாக இருக்கலாம்
இறந்து கொண்டிருக்கும்
ஒரு தேகத்தினுள்
சின்னதாய் துளைத்து நுழையும்
ஆபரேசன் கத்தியாக இருக்கலாம்
தனியே தூங்கும் குழந்தையின்
கனவில் தோன்றிய
காரணம் மறந்த சிறு பீதியாக இருக்கலாம்
ஒரு சின்ன பூவை பூக்க வைப்போம்