இன்று காலை தூங்கி
ஆரம்பித்த போது வந்த போனில் ஒருவர் திட்ட ஆரம்பித்தார். அதன் பிறகு ஏகப்பட்ட பிரச்சனை.
கடும் வேலை. மாலை ஏழரை வரை யாராவது அழைத்து திட்டிக் கொண்டிருந்தார்கள். எல்லாம் முடித்து
வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு தோழி போனில் அழைத்தார். அவரிடம் கேலி
பண்ணி பேசிக் கொண்டிருந்தேன். நான் பொதுவாய் அவரிடம் அப்படி மனம் விட்டு வேடிக்கையாய்
பேசினதில்லை. அவர் கேட்டார் “நீ எப்பவுமே உம்மணாமூஞ்சியாச்சே. இன்னிக்கு என்ன சிரிக்க
சிரிக்க பேசுறே?”. எனக்கே அப்போது தான் அது உறைத்தது. சட்டென எந்த காரணமுமில்லாமல்
நல்ல மனநிலையில் சந்தோசமாய் இருந்தேன். அடி வாங்க வாங்க மனம் சிரிக்கிறது!
புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share