Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

அந்த கடைசி வரி என் அத்தனை கேள்விகளையும் காலி பண்ணிவிட்டது - பூங்குழலி




-   (பூங்குழலி என்றபுனைப்பெயரில் கொண்ட வாசகி ஒருவர் எனது “கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்” நாவலுக்கு எழுதிய விமர்சனம் இது. அவரது மின்னஞ்சலை அவரது அனுமதி பெற்று இங்கு பிரசுரிக்கிறேன்)
இனி அவரது sparkling விமர்சனம்:
”நாவலின் இறுதி வரி “உங்களுக்கு மூன்று மாதங்களுக்கு விடுப்பு அளிக்கிறோம் “ – அட்டகாசம் அபிலாஷ் ! இதில் அத்தனை Power-play-யும் அடங்கிவிட்டது. எனக்கு ஆரம்பிதிலேர்ந்து ஒரு கோபம் ! கதாநாயகன் எதற்கு மனச்சிதைவோடு Depict ஆக வேண்டும் என்று ? but, இந்த கடைசி வரி என் அத்தனை கேள்விகளையும் காலி பண்ணிவிட்டது. Bravo!


காகங்களின் magic realism மற்றும் நீல நிறத்தின் போதையான Motifs தான் இந்த நாவலின் Continuity editing. Jolly yaga இருந்தது. 
எல்லா Class மக்களையும் involve பண்ணி, எல்லோரையும் ஒரே ஆளாக மாற்றிவிடீர்கள். என் ஒரே வருத்தம் எத்தனை back stories! 
நாம் எல்லோரும் எலும்பு கூடுகளா?
 அதுவும் எனக்கு ஏனோ மோகன் பாத்திரத்தை பிடித்து விட்டது ! Professional aaga, calm aai, evidence collect பண்ணி விட்டு, அதில் பேதலிக்கமல், அழகாக பக்கத்து ரூம்க்கு போய், காபி சாப்பிடுகிறவர்களை எனக்கு பிடிக்கும். அவரையும் Commissioner வாயிலாக, ஒரு வேளை, அவருமா இப்படி , என்று யோசிக்க வைத்தது ….. Oh, I whole-heartedly hated u for that . அதுவே உங்கள் மாபெரும் வெற்றியும் கூட
அத்தனை பெற்றோரும் படிக்க வேண்டிய அதி முக்கியமான புத்தகமிது. ஏன் இவ்வளவு Low-key Promotion !!!!!
என்னால் இந்த புத்தகத்தை ஒரே மூச்சில் எல்லாம் படிக்க முடியவில்லை. காரணம் அதன் heavy-duty content. காரணம், Blunt truths. Facing the truth is the most difficult thing for the human mind. WHEW ! Take a Bow, Writer.

 I had a movie to catch at 10 Am. Its a beautiful kannada film called "thithi". And with that, the day kept changing shades and colors. I experienced everything from pain to purity to laughter to violence to mystery to philosophy to psychology and urs was how it ended. Pretty insane and beautiful. Imagine all ur readers going through this roller-coaster ride with u somewhere in between. u must feel like god :)
யுக்தி, வடிவம், Motif, Transition, Clever endings blah blah laam தாண்டி , this is a very very IMPORTANT READ for everyone in society. Please PROMOTE
THUMBS UP for all the upcoming novels. Next, i will catch ur ரசிகன். I am avoiding kaalgal and Bruce lee. Cos am afraid I wil get influenced. I will pick ரசிகன் next month. Not now. I wanna sorta let "கதை முடிவுக்கு…." linger for some time

........best wishes, writer"

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...