முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

”கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்”: சரஸ்வதி காயத்ரி


(சரஸ்வதி காயத்ரியின் முகநூல் பதிவு)
நேற்று வாசக சாலையின் 17 வது சந்திப்பில் அபிலாஷ் சந்திரனின் " கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்" என்னும் துப்பறியும் நாவலை பற்றி பேசக்கிடைத்த வாய்ப்பு இலக்கிய உலகில் எனக்கு இது முதல்முறை...
வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த Sridevi Ramya A மற்றும் வாசக சாலையின் Venkatraman Karthikeyan,என்னை உற்சாகப்படுத்தி பேசவைத்த Thendral Sivakumar அனைவருக்கும் நன்றி...
இந்தக் கதையை வாசித்து முடித்தவுடன் அதில் நடைபெறுவதாக சொல்லப்படும் சம்பவங்களும்,அவற்றை நடத்துபவர்களும் என்னை பயமுறுத்தினர்...

child abuse செய்யப்பட்டு நடக்கிற கொலைகள் ....செய்தித்தாள்களிலும்,பல நூறு ஆயிரம் பெண்களின் வழியாகவும் கேள்விப்பட்டிருந்தாலும் கட்டாயமாக மறக்கப்பட நினைக்கிற சம்பவங்கள்....
"
மனிதர்களின் ஆழ்மனதில் பதிந்திருக்கிற வக்கிரங்களை அடிதட்டு மனிதனிலிருந்து மேலதிகார வர்க்கம் வரை" எப்படி நடக்கிறதென்பதை தன் அநாயசமான மொழி நடை வழி எழுதியிருக்கிறார் அபிலாஷ்.
சான்றோர்கள் எல்லாம் இக்கதை எந்த வகைமை,எதன் தாக்கம் என்பது பற்றியெல்லாம் பேசினார்கள் ....
நேற்று கண்ணெதிரே நடந்த ஒரு கொலையைக் கூட பார்த்து விட்டு அவரவர்" கடமையை" ஆற்ற கண்டுகொள்ளாமல் இரயிலேறுகிற (இரயிலும் கிளம்புகிறதே!) சமூகத்தில் தான் நாம் இருக்கிறோம்...
எந்தவித ஈவு இரக்கமும் பார்க்காமல் ஒரு பூவைக்கூட ஷூ காலால் நசுக்கி உரு தெரியாமல் அழிக்க நினைக்கிற மனோபாவம் மிகுந்து கிடக்கிற மனிதர்கள் சூழத்தான் இருக்கிறேன் என்றாலும் எனக்கு
வன்முறைகளை மறந்து வாழ்வதற்கான எந்த அனுபவத்தையும் கொடுக்காமல் பயத்தை கிளறிவிடுகிற நாவலாக இருக்கிறதே என்ற என் ஆற்றாமையை சொன்னேன்...
என் தோழிகளுக்கு இந்நாவலை படியுங்கள் என பரிந்துரைக்க முடியாதென்பதையும் சொன்னேன்....இப்போது வியந்து பார்க்கிறேன்..
."
யுவ புரஸ்கார் " விருது பெற்ற திரு.அபிலாஷ் அவர்கள் எத்தகைய மனம் கொண்டிருந்தால் அவருடைய நாவலுக்கு எதிர்வினையாற்றிய என்னை " நல்லா பேசினீங்க" என சொல்லவும் ,எழுதவும் முடியும்....!
நன்றி! அபிலாஷ்....உங்களுக்கு எனதன்பு வாழ்த்துகள்...
நீங்கள் எழுத்துலகில் அடையப் போகும் வெற்றிகளுக்கு முன்னதான என் ஆசிகள்...
கிரிக்கெட் பற்றிய உங்களின் தொடர் கட்டுரைகள் மிகவும் ஆழ்ந்து எழுதப்பட்டுள்ளதால் நான் என்றும் ரசிப்பவை..
இலக்கியகர்த்தா கிரிக்கெட்டை எழுதுதல் இனிமையான ஆச்சரியம்...!
உங்கள் நாவல் தந்த அதிர்ச்சியை உங்களின் பேச்சு போக்கி விட்டது...நன்றி!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...