இன்றைய இந்துவில் நமன் ராமசந்திரன் கபாலியில் உள்ள குறியீடுகள் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். படத்தில் வரும் ஒரு சீன பாத்திரம் பெயரை ஆங் லீ என ரஞ்சித் வைத்தது ஆங் லீ எனும் இயக்குநருக்கான அவரது homage என்கிறார். இந்த அறிவு முருகதாஸுக்கு இருந்திருந்தால் அவர் “ஏழாம் அறிவில்” டோங் லீ பாத்திரத்துக்கு குரசாவோ என பெயர் வைத்திருப்பார். பாவம் முருகதாஸ், அவர் ஒரு வணிக இயக்குநர், அவருக்கு ஹோமேஜ் எல்லாம் தெரியாது!
புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share