இன்னும் கடிதங்கள் இல்லை!
தபால் பெட்டியில் அடைக்கலம் கொள்ளும்
மௌனம்
இறந்த தேகத்தை எடுத்த பின்
ஒரு அறையை இறுக்கிப் பிடிக்கும்
மௌனம்,
உலர்ந்த இலைகளின் மத்தியில்,
முன்னொரு காலத்தில் தெய்வம் இருந்த
கற்களில்,
இடங்கொள்ளும் மௌனம்,
அலமாரியின் தீண்டப்படாத மூலையில்
–
கலைக்கப்படாத தூசுப்படலத்தின்
கீழ்
பாக்கி உள்ள மருந்து, மாத்திரை
புட்டிகளில்
வாழும் மௌனம் –
ஒரு சிலந்தியின் கூடு.
(Muse India இதழில் வெளியான Still No Letters எனும் கவிதையின் முதல் பத்தியை
மட்டும் தமிழாக்கி இருக்கிறேன். பித்யுத் ஒரு ஒரிய கவிஞர். ஆங்கிலத்திலும் எழுதக் கூடிய
இவர் ஒரு ஆங்கிலப் பேராசிரியர்)