முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

”பிரக்ஞை என்றால் என்ன?” கட்டுரை பற்றி ஜெ.பி ராஜேந்திரன்


ஜெ.பி ராஜேந்திரன் லண்டனில் வசிக்கும் உளவியலாளர். நுண்மையான வாசகர். தனித்துவமான பார்வை கொண்டவர். அவர் எனது ”பிரக்ஞை என்றால் என்ன?” கட்டுரைக்கு ஒரு சிறப்பான எதிர்வினையை முகநூலில் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். அதையும் அதன் மொழியாக்கத்தையும் கீழே தந்துள்ளேன்:
I quite like this article Abilash Chandran.. fairly thorough and comprehensive 360 degree look at Prajna - the transcendental wisdom and its ramifications in linguistics. There is an extrapolation of Space and time continuum and it's association to essence of meaning in language you have touched upon. I kept thinking about this for a while to realise it is the same concept of Kant's 'Thing in itself'. Not sure if you kept this in back of your mind while dealing with this. Anyway helped me to refresh my thinking on the same. Thought I would highlight the same to you. Also NLP or neurolinguistics has many a practical applications to debride the attached emotions to understandings based on these principles too. Just quote about the thing in itself for sake of completion.

What is the thing in itself?
thing-in-itself definition. A notion in the philosophy of Immanuel Kant. A thing-in-itself is an object as it would appear to us if we did not have to approach it under the conditions of space and time.

மொழியாக்கம்:
அபிலாஷ், உங்களது இக்கட்டுரை என்னை வெகுவாக கவர்ந்தது. முற்றுமுழுதாய், விரிவாய் 360 டிகிரி கோணத்தில் பிரக்ஞையை, மொழியியலில் அதன் சிக்கலான விளைவுகளை அலசும் கட்டுரை. காலம் மற்றும் வெளியின் கணுத்துவம் (தீவிர நிலைகள் மட்டும் வெளித்தெரியும் நீட்சி) பற்றிய அடிப்படையான ஊகம் கொண்டு எதிர்காலத்தில் சில போக்குகள் எப்படி தொடரப் போகின்றன, இதற்கு மொழியின் அர்த்தத்தின் சாரத்துடனான உறவு என்ன என தொட்டிருக்கிறீர்கள்.நான் இதைப் பற்றி சற்று நேரம் சிந்தித்தபடி இருந்த போது சட்டெனத் தோன்றியது: நீங்கள் பேசுவதையே காண்ட் thing-in-itself என சிந்தித்திருக்கிறார். நீங்களும் எழுதும் போது இதை மனதில் கொண்டிருந்தீர்களா என்பது தெரியவில்லை. எனக்கு இவ்விசயத்தில் என் சிந்தனைகளை புதுப்பிக்க இக்கட்டுரை உதவியது. இதை உங்களிடம் குறிப்பிட்டு சொல்லத் தோன்றியது. இந்த கருத்துக்களின் அடிப்படையில் உணர்வுகளில் இருந்து புரிதலை தனித்துக் காட்ட நரம்பணு-மொழியியல் நடைமுறை சார்ந்த பல பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. இதை முழுமை பெறச் செய்ய thing-in-itself பற்றின அகராதி விளக்கத்தை கீழே தந்துள்ளேன்:

Thing-in-itself - இம்மானுவல் காண்டின் தத்துவத்தில் உள்ள ஒரு கருத்தமைவு, கால-வெளி சார்ந்து ஒரு பொருளை நாம் அணுகாத போது அது நமக்கு எப்படித் தோன்றுமே அதுவே Thing-in-itself என்பது. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.