முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

டென்னிஸ் 3


 Image result for tennis paintings
உட்கார இடம் இன்றி நான் வெளியே வந்தேன்அப்படித் தான் நான் அவனைப் பார்த்தேன்எங்கேடென்னிஸ் ஆடுகளத்தில். அது உதைப்பந்து மைதானத்தை ஒட்டிய பூங்காவுக்குப் பின்னால் இருந்தது. அதனை ஒட்டிய வழியே சென்றால் சுலபத்தில் நூலகமும், நான் அடிக்கடி ஹாட் சாக்லேட் அருந்தும் கடையும் வந்து விடும். நூலகத்துக்கு முன்னால் மேலாண்மை, சட்டம் ஆகிய துறை மாணவர்களின் வகுப்பறைகள் இருந்தன. ஆகையால் அவர்களில் கணிசமானோர் ஓய்வு வேளைகளில் அந்த கடை வாயிலிலோ அல்லது ஆடுகளத்திலோ தான் இருப்பார்கள். அவர்களுடையது ஒரு தனி உலகம். நான் அதிகம் அங்கே செல்வதில்லை.

ஆனால் அன்று பிரதான அரங்கத்தில் இசைப் போட்டிகள் நடந்ததால் ஆடுகளம் நடமாட்டம் குறைவாய், சற்றே அமைதியாய் இருந்தது. டொப் தப் எனும் பந்துகள் இதமாய் தட்டுப்படும் ஒலி மட்டுமே. இடையிடையே பையன்கள் இந்தியில் பேசி சிரித்தார்கள். நான் ஹாட் சாக்லேட் வாங்கிக் கொண்டு காலி சிமிண்ட் இருக்கையில் அமர்ந்து, கால் மேல் கால் போட்டு புத்தகம் படிக்க ஆரம்பித்தேன். மரங்களில் இருந்து மென்காற்று என் காதுமடல்களைத் தொட்டு மறைத்த மயிர்க்கற்றையை அசைத்து குறுகுறுக்க வைத்தது. பின்னங்கழுத்து சிலிர்த்தது. நாவலின் கதையில் ஒரு திகிலூட்டும் திருப்பம். நாயகி அலறுகிறாள். அவள் கண்முன் திட்டுத்திட்டாய் குருதிப் பூக்கள். யாரோ அழைக்கும் உணர்வு. நிமிர்ந்து பார்த்த போது அவன் சர்வீஸுக்கு தயாராவதைப் பார்த்தேன்.
 நீளமான சுருள் மயிரை பானி டெயிலாக கட்டி இருந்தான். கோலிக்குண்டு போல் அசையும் தொண்டைக்குழி. நீள மூக்கு. அழகான நீண்ட கண்கள். என்னைக் கண்டு அவன் புன்னகைப்பது போல் தோன்றியது. மீண்டும் பார்த்தேன். ஆமாம், இல்லை என ரெண்டுமே தோன்றியது. அந்த கம்பீரத்தின் மத்தியிலும் அவனது அசைவுகளில் ஒரு வேடிக்கைத் தன்மை இருந்தது. திருகாணிகள் பாதி கழன்று கைகால்கள் ஆட்டம் காணும் ஒரு எந்திர பொம்மை போல் அசைந்தான். நெளியும் தழல் போல் ஒரு உருவம்.
 என்னை அவன் நேரடியாய் கவனிக்காவிடிலும் அவன் ஏனோ பதற்றமாகிக் கொண்டே வந்தான். முதல் செர்வில் அவன் கையில் இருந்து ரேக்கெட் நழுவியது. அவனை கலாய்த்தபடி ஓரமாய் இருந்த அவன் நண்பர்கள் இப்போது எதையோ எதிர்பார்த்து சிரித்தபடி மெல்ல கைத்தட்ட துவங்கினர். அவன் அவர்களை நோக்கி வெட்கத்துடன் சிரித்து விட்டு ரேக்கெட்டை உறுதியாய் பற்றிக் கொண்டு லேசாய் முதுகை பின்னால் வளைத்து ஸ்டைலாய் பந்தை அடித்தான். அந்த வெட்கச் சிரிப்பை பார்த்த நொடி எனக்கு அவனது நெற்றியில் வருடி, முடிக்கற்றைகளை கோதி ஒதுக்கி, உச்சந்தலையில் விரல்களால் நீவி விட வேண்டும் எனத் தோன்றியது. உடனே கண்களை தாழ்த்திக் கொண்டு வாசிப்பது போல் பாவனை செய்தேன்.
 இந்த அரைநொடியில் பந்து எங்கே போயிற்று என்பதை நான் கவனிக்க வில்லை. பந்து வலையைத் தாண்டி என் காலடியருகே ஒரு பூனைக்குட்டி போல் வந்து பதுங்கிக் கொண்டது. நான் தொடர்ந்து ஒன்றுமே நடக்காதது போல் பாவித்தபடி கால்களை உள்ளிழுத்தேன். பந்து மேலும் உருண்டு தன் சொரசொர கன்னத்தால் என் கணுக்காலில் தேய்த்தது. புத்தகத்தில் பார்வையை பதித்து அது வழுக்கி வழுக்கி செல்ல பிடித்து வைத்துக் கொண்டிருந்தேன். அவன் நடந்து வரும் போது கழுத்து, தோள்கள், முழங்கை, மணிக்கட்டு என தனித்தனியாய் அசைந்தன; மெல்ல நடனமாடி வருவது போன்ற நடை. ஒரு நொடி குழம்பி நின்று விட்டு என் காலடியை நோக்கி குனிந்தான். அவன் நண்பர்களின் சிரிப்பொலி கேட்ட்து.
 நான் தன்னிச்சையாய் எம்பி எழுந்தேன். தாவி தள்ளிச் சென்று நின்றேன். அவன்சாரி சாரிஎன்றபடி பந்தைப் பொறுக்கிக் கொண்டான். நான் என்னையறியாது சிரித்து விட்டேன். அவன் மீண்டும் லஜ்ஜையாய் புன்னகைத்து விட்டு தோளை பின்னால் சாய்த்து நடந்து அகன்றான். தன்னிடத்துக்கு மீண்டும் சென்று செர்வ் செய்ய ஆரம்பித்தான்.
 துல்லியமான அமைதி. நான் இம்முறை அவனை கவனித்தேன். அடித்தான். பந்து இம்முறையும் வெளியே தெறித்து உருண்டோடி சரியாக என் காலருகே வந்து கணுக்காலை சன்னமாய் முத்தமிட்டது. நான் பந்தைப் பொறுக்கி அவனை நோக்கிப் போட்டேன். கௌரவமாய் அதைப் பெற்று ஒன்றுமே நடக்காதது போல் மீண்டும் சர்வீஸ் ஆரம்பித்தான். இம்முறை நான் வலையருகே சென்று நின்றேன். பந்து துள்ளி வந்து என் இடுப்பைத் தொட்டு இன்னும் கொஞ்சம் எம்பவா எனக் கேட்டது. கையில் சுலபமாய் பற்றி திரும்ப வீசினேன். அவன் நண்பர்கள் விளையாட்டை எங்கள் இருவருக்கானதாய் கருதி ரசிக்கத் துவங்கினர்.
சற்று நேரத்தில் இருள் கவிந்தது. லேசான தூறல். என் இமையில் ஒரு சின்ன துளி தங்கி ஏழு வர்ணங்களை ஜொலித்தது. துப்பட்டாவால் முகத்தை துடைத்தபடி அவனைத் தேடினேன். எங்கும் இல்லை.
அடுத்தடுத்த நாட்களும் நான் அங்கே வரத் தொடங்கினேன். அவன் சில நேரம் பார்வையாளர்களில் ஒருவனாய் இருப்பான், சில நேரம் பயிற்சியில் ஈடுபடுவான். ஓரிரு முறை நாங்கள் தேநீர்க் கடையில் எதிர்கொண்ட போது புன்னகை பரிமாறிக் கொள்ளவில்லை. என்னை பரிச்சயமே இல்லை என்பது போல் காட்டிக் கொண்டான்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.