முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கவிதையில் மிகைச்சொற்களின் தேவை (4)


Image result for மனுஷ்யபுத்திரன்

நமக்கிடையே மூடும் கதவுகள்
நமக்கிடையே வளரும் சுவர்கள்

என்பதில் உள்ள மீள்கூறல் மனுஷ்யபுத்திரனின் வாசகர்களுக்கு வெகுவாய் பரிச்சயமானது. பாப்லோ நெருடாவை நினைவுபடுத்துவது. (தமிழில் பெரும்பாலான நவீன கவிஞர்கள் இந்த மீள்கூறல் உத்தியை தவிர்க்கிறார்கள்; ஆனால் வைரமுத்து, அப்துல் ரகுமான், தமிழன்பன் போன்ற வானம்பாடிகள் இதை தாராளமாய் எடுத்தாண்டிருக்கிறார்கள்.) ஒரு பெரும் மக்கள் திரளை நோக்கி ஒருவன் உரையாற்றும் தொனியை இது மனுஷ்யபுத்திரன் கவிதைகளுக்கு தருகிறது என்கிறார் ஜெயமோகன் (“கடவுளற்றவனின் பக்திக் கதைகள்: மனுஷ்யபுத்திரன் கவியுலகு”). இங்கே வெகு அந்தரங்கமான ஒரு துயர கவிதையில் தனிமையை இன்னும் உக்கிரமாக்கவும் மனுஷ்யபுத்திரன் இந்த உத்தியை பிரயோகிக்கிறார்.  
அடுத்து அவரது சொற்தேர்வை பார்ப்போம்.

ஒவ்வொரு நாளும்
வேறுவேறு இடங்களில் பிரிகின்றன
இங்கு அவர் எதுகையை கொண்டு வர நினைத்திருந்தால் வெவ்வேறுஎன எழுதியிருக்கலாம். இசை ஒழுங்கு மீது மனுஷ்யபுத்திரனுக்கு ஒவ்வாமை இல்லை. ஆனால் அவர் ஏன் செய்யவில்லை? இங்கு எதுகை அமையாமல் இடறுகிறது. அது சற்றே நிரடுகிறது. பிறகு ஏன் மனுஷ்யபுத்திரன் இச்சொல்லை தேர்கிறார்?
 வெவ்வேறுஎனும் சொல் சன்னமானது; வேகமாய் ஒழுங்கிச் செல்வது; மேலும் எதுகையானால் அச்சொல்லில் நாம் நின்று யோசிக்க மாட்டோம். இந்த இடத்தில் பிரிவின் கனம் கூடி வர வேண்டுமெனில் ஒரு கனத்த சொல் வேண்டும். ஆகையால்வேறுவேறுபொருத்தம். அச்சொல் சோற்றிடையே நாம் கடித்த சிறு கல்லைப் போல் உறுத்துகிறது.
அதே போல இக்கவிதையில்வாழ்விடங்களுக்கு, “துயரங்களெங்கும், “நீங்குதலின், “இல்லாமலாகும்போன்று 15 கனத்த ஓசை கொண்ட நீண்ட சொற்கள் வருகின்றன. தமிழுக்கே உரித்தான பெயர்ச்சொல் + வினையுரிச்சொல் ஜோடிச்சொற்களை நிறைய பயன்படுத்துகிறார் (.தா, “துயரங்களெங்கும், “நமக்கிடையே”). இதைப் போன்றே பன்மைச் சொற்களும் (”நிலங்களின், ”வாழ்விடங்களுக்கு”) வருகின்றன. ”அந்தி இருள்என எழுத முடிகிற இடத்தில்அந்தியின் இருள்என்கிறார். இவை எல்லாம் சேர்ந்து இக்கவிதையை நீங்கள் உரக்க படிக்கிறீர்கள் என்றால் வேகமாய், ஜிலுஜிலுவென வாசித்துப் போக முடியாது. உங்கள் வாசிப்பின் கால அளவு நீள்கிறது. நீண்டு செல்லும் உணர்ச்சி என்றுமே துயரம் தானே! இப்படி இக்கவிதையை சொற்தேர்வின் வழியே மட்டுமே, கனத்த தொனியை ஏற்படுத்தி, நம் மனதுக்குள் கசப்பேற செய்கிறார் மனுஷ்யபுத்திரன்.
இனி கவிதையின் இறுதி வரி.
ஒரு சிறிய துயரம்
நம்முடன் ஒரு வார்த்தை பேசாமல்
மௌனமாக கூடவே நடந்து வருகிறது
இது பிரிகிற அந்த காதல் ஜோடியின் கையைப் பற்றியபடி ஒரு குழந்தை நடந்து வருகிற தோற்றப்பிழையை உருவாக்குகிறது. அதுவும் குழந்தையாகிய சிறு துயரம் மிக அமைதியாய் நடந்து வருகிறது. உடைந்த குடும்பங்களில் தான் அப்படி நிகழும். இங்கே குடும்பமே இல்லை; ஆனாலும் கற்பனையில் ஒரு குடும்பம் இருக்கிறது. அது அவர்கள்தூக்கிய வளர்த்த துயரமாகஇருக்கிறது. இந்த நெகிழ்ச்சியான உருவகத்தில் என் கவனத்தை நெருடிய விசயம்ஒரு வார்த்தை பேசாமல் / மௌனமாக”.
ஒரு வார்த்தை பேசாமல் என்றாலே மௌனம் தானே? ஏன் மீள சொல்ல வேண்டும்? அதே போலநம்முடன்என்பதில்உடன்இருக்கிறதே; அதை திரும்பகூடவேஎன ஏன் அதே வாக்கியத்தில் சொல்ல வேண்டும்?
ஒரு காரணம் உள்ளது.
இவ்வாக்கியத்தை ஒருவேளைநம்முடன் /
மௌனமாக நடந்து வருகிறதுஎன திருத்தினால் (சலூனில் முடிவெட்டி வந்த குழந்தை போல) வாக்கியம் ஜீவனற்று போகிறது; ஏனெனில்
 ஒரு சிறிய துயரம்
நம்முடன் ஒரு வார்த்தை பேசாமல்
மௌனமாக கூடவே நடந்து வருகிறது

என்பதில் மீள ஒலிக்கும் அச்சொற்கள் நேர்பொருளுக்கு தேவையில்லை தான். ஆனாலும் கவிதையின் தனிமை தொனியை அடர்த்தியாக்க, நகைமுரணை தீவிரமாக்க, உங்கள் விழியோரம் துளிர்க்கும் அந்த ஒற்றைக் கண்ணீர்த் துளியை கனத்துப் போக செய்ய அச்சொற்கள் மிகையாய் தோன்றி மீள ஒலிப்பது அவசியமாகிறது.
ஆகையால் நண்பர்களே இதற்கு மேல் நான் சொற்களை இறைக்கப் போவதில்லை.  

நன்றி: தீராநதி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...