கடந்த மூன்று வருடங்களாய் தினமணி இளைஞர் மணியில் வெளிவரும் “வாங்க இங்கிலிஷ் பேசலாம்” தொடரின் மூன்றாம் பாகம் இது. He who sups with the devil
should have a long spoon எனும் சொலவடையை காவல்துறையினரைப் பொறுத்து
எளிய மக்கள் எப்படி புரிந்து கொள்வது, she protested to onions being added to
his sambar என சொல்லும் போது protestஇன் பொருள்
எப்படி மாறுகிறது, நேரம் கடந்து தூங்குவதற்கு sleep off சரியா
அல்லது oversleep பொருத்தமானதா, bro என நண்பனை அழைப்பதற்கும் bromanceக்கும்
என்ன தொடர்பு ஆகிய கேள்விகளுக்கு பல சுவாரஸ்ய்மான விளக்கங்களை இந்நூலில் காணலாம்.
புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share
