கடந்த மூன்று வருடங்களாய் தினமணி இளைஞர் மணியில் வெளிவரும் “வாங்க இங்கிலிஷ் பேசலாம்” தொடரின் நான்காம் பாகம் இது.
மாயன் பழங்குடிகளிடம் இருந்து எப்படி சிகரெட் எனும் சொல் தோன்றியது? grazing என்றால் ஆடோ மாடோ மேய்வது, ஆனால் ஒருவர் டிவியில் சேனல் மாற்றுவதை grazing எனச் சொல்ல முடியுமா?
Live in a cloud cuckoo land எனும் சொலவடையின் பின்னுள்ள கதை என்ன?
Lunatic என்ற சொல் பௌர்ணமி நிலவுடன்
எப்படி தொடர்பு கொண்டுள்ளது?
கிஸ்ஸடிப்பது எல்லாருக்கும் விருப்பமானது. ஆனால்
kiss
a gunner’s daughter என்பது ஆபத்தானது. ஏன்?
இக்கேள்விகளுக்கு விடை
காண இந்நூலை புரட்டுங்கள். புன்னகையுடன் ஆங்கிலம் அறியுங்கள்.
