ஆர். அபிலாஷ் போர்கேசிலிருந்து லோர்க்காவரை, குந்தர்
கிராசிலிருந்து ஷுன்தரோ தனிகாவா வரை, மார்கரெட்
அட்வுட்டிலிருந்து கேரல் ஆன் டப்பி வரை தமிழில் இதுவரை அதிகம் அறியப்படாத 32
உலகக் கவிஞர்களின் கவிதைகளைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்து
அக்கவிஞர்கள் குறித்த சிறு அறிமுகத்தோடு வெளிவந்திருக்கும் ”அன்புள்ள தெரிதா”
எனும் பெயரில் உயிர்மை மூலம் வெளியிடப்பட்டிருக்கும் இந்நூல் என்னைக் கவர்கிறது.
இதில் என்னையும் அபிலாஷையும்போல வாழும் எழுத்தாளர்கள் என்ன எழுதுகிறார்கள்
என்பதித் தெரிந்து கொள்ள இந்நூல் வழிசெய்கிறது. 13 ஆண்டுகளாக
உலகை அறிந்து கொள்ள தான் முயற்சி செய்ததின் தடங்கள் இவை என்று அபிலாஷ்
சொல்லும்போது அவர் மீதான கவர்ச்சி எனக்கு அதிகமாகிறது. பாராட்டுகள் அபிலாஷ்.
இந்நூலை இணையத்தில் வாங்க: https://www.udumalai.com/anbulla-derida.htm