ஷமி ரொம்ப சுமாரான களத்தடுப்பாளர் என்பது எதார்த்தம். ஆக, இறுதி ஓவர்களில் ஒரு பந்தை அவர் பந்தை சரியாக களத்தடுப்பு பண்ணாததில், ரன்கள் கொடுத்ததில் நமக்கு ஆச்சரியம் இல்லை. இதையே என வர்ணனையாளர்கள் சொல்கிறார்கள் என நான் புரிந்து கொண்டேன். ஆனால் இதே கட்டத்தில் பவுண்டரி லைனுக்கு அருகில் கோலி நின்றிருந்த போது தன்னை நோக்கி வந்த பந்தை போக விட்ட விதம் கொஞ்சம் விசித்திரமாக இருந்தது.
ஒரு ஸ்லைட் கூட அவர் பண்ணவில்லை. மாறாக இங்கிலாந்தின் பேர்ஸ்டோ மிக ஆவேசமாக பவுண்டிரியில் களத்தடுப்பு பண்ணினார். மேலும் மிடில் ஓவர்களில் கோலி உள்வட்டத்தில் நின்றிருந்த போது, வழக்கத்துக்கு மாறாக பல பந்துகளை தவற விட்டார். இது ஒரு fixed match என்பதற்கு மற்றொரு உதாரணம் கோலியின் இன்றைய வழக்கத்துக்கு மாறான களத்தடுப்பு.